முஷரப்பின் தூக்கு தண்டனைக்கு காரணம் இதுதானா..?? அதிரவைக்கும் பயங்கர பின்னணி..!!

By Ezhilarasan Babu  |  First Published Dec 17, 2019, 1:29 PM IST

100-க்கும் மேற்பட்ட நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தார்.  மிரட்டல் உருட்டல் என ஆட்சி பீடத்தில் கோலோச்சிய முஷரப் தேர்தல் தோல்விக்கு பிறகு இருக்கும் இடம் தெரியாமல் போனார்.  


பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வரும் நிலையில் தேச துரோக வழக்கில் பாகிஸ்தான் நீதி மன்றம் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.  பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் மு‌ஷரப் (74) வயது,   இவர் கடந்த  1999 முதல் 2008-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார்.  

Tap to resize

Latest Videos

துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவருக்கு அங்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது . அதாவது  பாகிஸ்தான் முன்னாள் இராணுவ அதிபராக இருந்த  பர்வேஸ் முஷரப்,   ஜனநாயகப் பாதையில் பயணித்துக்கொண்டிருந்த பாகிஸ்தானை ராணுவ ஆட்சிக்கு மடைமாற்றி சர்வதேச அரங்கை தன் பாக்கம் திரும்பிபார்க்க வைத்தவர் ஆவார். 

ராணுவ ஆட்சியை கொண்டுவந்து  பாகிஸ்தான் அரசியல் வரலாற்றையே மாற்றிப்போட்டார் முஷரப், ஒரு சர்வாதிகாரி போல அப்போது அவர் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது இப்போதும் உள்ளது.   ராணுவ  தளபதியான அவர் திடீரென நாட்டை கைப்பற்றி ஆண்டு வந்த நிலையில்  ஜனநாயக ரீதியில்  தேர்தலை சந்தித்து அதில்  படுதோல்வி கண்டார் . இவர் பதிவியில் இருந்த போது 2007 ஆம் ஆண்டு திடீரென அவரநிலை பிரகடணம் செய்யப்பட்டது,  அப்போது சும்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை வீட்டுக்காவலில் வைத்தார்.

 100-க்கும் மேற்பட்ட நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தார்.  மிரட்டல் உருட்டல் என ஆட்சி பீடத்தில் கோலோச்சிய முஷரப் தேர்தல் தோல்விக்கு பிறகு இருக்கும் இடம் தெரியாமல் போனார்.  பதவியில் இருந்தபோது  அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் என்பதற்காக அவர் மீது  தேச துரோகம் வழக்கு பதிவி செய்யப்பட்டது,   பின்னர் அதில் இருந்து தப்பிக்க வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று அங்கு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அவர் மீதான வழக்கு விசாரணை பாகிஸ்தானில்  சிறப்பு நீதி மன்றத்தில்  தொடர்ந்து நடைபெற்று வந்தது  .  ஆனால் அந்த வழக்கில் ஆஜராகாமல் அவர்  தள்ளிப்போட்டு வந்தார்.   

அதை தொடர்ந்து மு‌ஷரப்பின் பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டையை முடக்கி வைக்க பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதனால் அவர் வெளிநாடு பயணம் மேற்கொள்ள முடியாது. வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்ய முடியாது. பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கவோ, விற்கவோ முடியாது. என்ற நிலையில்  வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்தார் முஸ்ரப்.   இந்நிலையில் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால்,  

வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று அவர் பாகிஸ்தான் நீதிமன்றத்துக்கு கோரிக்கை வைத்தார்.  இந்நிலையில் இன்று வழக்கு விசாரணை நிறைவு பெற்றிருந்த நிலையில்  பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் முஷரப்புக்கு  தூக்கு தண்டனையை அறிவித்துள்ளது.  தற்போது உடல்நலக்குறைவால் துபாயில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் . முன்னாள் அதிபர் முஷராப் பாகிஸ்தான் நாட்டின்  பத்தாவது அதிபராக  பொறுப்பேற்றவர்  என்பது குறிப்பிடத்தக்கது

click me!