உலகின் மிகவும் மோசமான நில அதிர்வு மண்டலங்களில் ஒன்றான ஜப்பானின் அனைத்து பகுதிகளும் நிலநடுக்கங்களால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளன. அங்கு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மற்றும் அதன் விளைவுகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.
புத்தாண்டு தினத்தன்று ஜப்பானின் வடமேற்கு கடற்கரையில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களில் 48 பேர் பலியானார்கள். இந்தச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமி ஏற்படுக்கூடும் என்ற அச்சத்தையும் எழுப்பியது.
உலகின் மிகவும் மோசமான நில அதிர்வு மண்டலங்களில் ஒன்றான ஜப்பானின் அனைத்து பகுதிகளும் நிலநடுக்கங்களால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளன. அங்கு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மற்றும் அதன் விளைவுகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.
ஜப்பானில் என்ன நடந்தது?
ஜனவரி 1ஆம் தேதி மாலை 4 மணிக்கு மேல் நோட்டோ தீபகற்பத்தில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் வடமேற்கு கடற்கரையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 48 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
விர்சுவல் ரியாலிட்டி வீடியோ கேமில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 'அவதார்கள்'
இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் புத்தாண்டைக் கொண்டாடிக்கொண்டிருந்த மக்கள் மத்தியில் இந்த பூகம்பம் பீதியைக் கிளப்பியது. திங்கட்கிழமை 16 அடி உயரத்திற்கு சுனாமி அலை ஏற்படக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை வெளியிட்டது. பின்னர், செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மேல் சுனாமி எச்சரிக்கைக திரும்பப் பெறப்பட்டது.
புத்தாண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் 2018ஆம் ஆண்டிலிருந்து ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகும். இதன் விளைவாக குறைந்தது 200 கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கானோர் உணவு, குடிநீர் மற்றும் மின்சாரம் வசதி இல்லாமல் தவிக்க நேர்ந்தது. மேலும் அப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகள் தடைபட்டன.
நிலநடுக்கங்கள் தொடரும் அபாயம் உள்ளதா?
இதே போன்ற மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்படுவதால் அங்குள்ள கட்டடங்கள் பெரிய ஆபத்தில் உள்ளன என்றும் கூறியுள்ளது.
நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வரும் வாரத்தில் பெரிய பூகம்பங்கள் மற்றும் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது ஏன்?
ஜப்பானின் பூகம்ப ஆராய்ச்சிக்கான தலைமையகத்தின்படி, நோட்டோ தீபகற்பத்தில் நிலத்தடி தட்டுகள் ஒன்றை ஒன்று தள்ளுகிறது. இதனால், 2018ஆம் ஆண்டிலிருந்து இப்பகுதியில் நிலநடுக்கங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் நில அதிர்வுகள் அதிகமாகியுள்ளன.
நவம்பர் 2020 முதல் பிப்ரவரி 2023 வரை நோட்டோ தீபகற்பத்தில் 14,000 க்கும் மேற்பட்ட சிறிய பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மே மாதம் நோட்டோ பகுதியில் ஏற்பட்ட 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தார்.
நோட்டோ தீபகற்பத்தில் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பம் நோட்டோ-ஹான்டோ பூகம்பம் ஆகும். இது மார்ச் 25, 2007 அன்று 6.9 ரிக்டர் அளவில் ஏற்பட்டது.
ஜப்பானில் நிலநடுக்க ஆபத்து?
ஜப்பானில் பெரும் பூகம்பங்களால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். கிரேட் ஈஸ்ட் ஜப்பான் பூகம்பம் என்று அந்நாட்டு மக்களால் அழைக்கப்படும் நிலநடுக்கம் 2011ஆம் ஆண்டு ஏற்பட்டது. இதில் அந்நாட்டின் வடக்குப் பகுதியின் பெரும்பாலான இடங்கள் உருக்குலைந்தன. அந்த பூகம்பம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் சுமார் 20,000 பேர் உயிரிழந்தனர். சுமார் 2,500 பேர் காணாமல் போயுள்ளனர்.
1,20,000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து விழுந்தன. இதன் விளைவாக டோக்கியோ எலக்ட்ரிக் ஃபுகுஷிமா ஆலையில் ஜப்பானின் மிக மோசமான அணுசக்தி பேரழிவு ஏற்பட்டது. இதன் பாதிப்பிலிருந்து மீளும் பணிகளுக்காக அந்நாட்டு அரசு வரிகளை உயர்த்தியது.
1995ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6,000 க்கும் அதிகமானோர் இறந்தனர். 2016இல் குமாமோட்டோ நிலநடுக்கம் 200 க்கும் மேற்பட்டவர்களைக் பலி கொண்டது. 1923இல் டோக்கியோவைத் தாக்கிய பூகம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 100,000 ஐத் தாண்டும் என்று கூறப்படுகிறது.
உலகின் எந்த மூலையிலும் மொபைல் இன்டர்நெட் சேவை! 6 சாட்டிலைட்களை ஏவியது ஸ்பேஸ் எக்ஸ்!