Covid19:இனம்புரியா பயம், மன அழுத்தத்தால் இளைஞர்கள், பெண்கள் மோசமாக பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

By Pothy Raj  |  First Published Mar 3, 2022, 11:16 AM IST

Covid-19: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களிடையே இனம்புரியா பயம், மனச்சோர்வு, மனஅழுத்தம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.


கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களிடையே இனம்புரியா பயம், மனச்சோர்வு, மனஅழுத்தம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் நேற்று ஜெனிவாவில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது: 

Tap to resize

Latest Videos

undefined

கொரோனா வைரஸ்  பெருந்தொற்று பரவத் தொடங்கிய முதல் ஆண்டில், வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களிடையே ஒருவகையான இனம்புரியாத பயம், மனச்சோர்வு, மனஅழுத்தம் 25 சதவீதம் அதிகரித்திருந்தது. இதையடுத்து, 90 % நாடுகள் நடத்திய சர்வேயில் கொரோனா மீட்பு திட்டத்தில் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு மனரீதியாக, உளவியல்ரீதியாகஆலோசனைகள், ஆதரவு தேவை என்பதை குறிப்பிட்டிருந்தன. ஆனால், தற்போது அந்த மனரீதியான, உளவியல்ரீதியான சிகிச்சையில் பெரிய இடைவெளி உருவாகியிருக்கிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை சமூக ரீதியாக புறக்கணித்தல் என்பது எப்போதுமில்லாத மன அழுதத்தை ஏற்படுத்துகிறது. தங்கள் அன்புக்குரியவர்களிடம் இருந்தும், ஆதரவை எதிர்பார்க்கிறார்கள், பணியாற்ற விரும்புகிறார்கள், சமூகத்தினரோடு கலக்க விரும்புகிறார்கள். ஆனால்,மனச்சோர்வு என்பது சுகாதாரப் பணியாளர்களிடையே தற்கொலை எண்ணத்தை தூண்டியுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம், மனரீதியான பாதிப்பு குறித்து நம்மிடம் மிகக்குறைவான தரவுகள் மட்டுமே இருக்கின்றன. ஆதலால், கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மனரீதியான சிகிச்சையும், அவர்களுக்கு மனதீரியாக நல்ல ஆதரவும் வழங்க வேண்டிய பொறுப்பும், கவனமும் தேவைப்படுகிறது அனைத்து நாடுகளும் இது எச்சரி்க்கை மணியாகும். 

கொரோனாவிலிருந்து மீண்ட இளைஞர்கள், பெண்கள் ஆகியோர் மனரீதியாக பாதிக்கப்பட்டு தங்களை தாங்கே காயப்படுத்திக்கொள்ளுதல், தற்கொலை முடிவுக்கு அதிகம் செல்கிறார்கள்.

ஆண்களைவிட இதில் பெண்கள்தான் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். ஏற்கெனவே உடல் உபாதைகளுடன் இருக்கும் பெண்கள்,அதாவது ஆஸ்துமா, புற்றுநோய், இதயநோய்  இருப்பவர்களுக்கு மனரீதியான,உளவியல் ரீதியான சிக்கல்கள், பிரச்சினைகள் அதிகம் உருவாக வாய்ப்புள்ளது.

உலகளவில் இந்த பெருந்தொற்று மக்களுக்கு மனதீரியான, உளவியல்ரீதியான பிரச்சினைகளை அளித்துவிட்டது. யாருக்கு அதிகம் ஆதரவு தேவையோ அவர்களைக் கவனித்துக்கொள்வதில் பெரிய இடைவெளி விழுந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வி்ல் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள், மீண்டவர்களுக்கு மனரீதியான, உளவியல் ரீதியான சிகிச்சைகளை 90 சதவீத நாடுகள் வழங்குகின்றன. ஆனால், கொரோனாவிலிருந்து மீண்டபின் நீண்டகாலத்துக்கு இந்த சிகிச்சையை வழங்குவதில்லை, அதற்கான உளவியல்ரீதியான மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது என்பது தெரியவந்துள்ளது

இவ்வாறு டெட்ராஸ் அதானம் தெரிவித்தார்
 

click me!