இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமர்..மார்கரெட் தாட்சரின் மறுஉருவம் - யார் இந்த லிஸ் டிரஸ் ?

By Raghupati R  |  First Published Sep 5, 2022, 6:21 PM IST

இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக்குக்கும், தற்போதைய வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் லிஸ் டிரஸ்.


இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் :

இங்கிலாந்து பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவியேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். சொந்த கட்சியினர் மத்தியிலேயே போரிஸ் ஜான்சனுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற தொடங்கியது.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

லிஸ் டிரஸ் Vs ரிஷி சுனக் :

இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக்குக்கும், தற்போதைய வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் லிஸ் ட்ரஸ். மார்கரெட் தாட்சர் மற்றும் தெரசா மே ஆகியோருக்குப் பிறகு லிஸ் டிரஸ் பிரிட்டன் நாட்டின் மூன்றாவது பெண் பிரதமராகிறார். 

யார் இந்த லிஸ் டிரஸ் ? :

46 வயதான லிஸ் டிரஸ் 1997 முதல் கன்சர்வேட்டிவ் கட்சியின் பல்வேறு பதவிகளில் பணியாற்றி வருகிறார். 1996 முதல் 2000 வரையில் Shell நிறுவனத்தில் பணியாற்றிய லிஸ் டிரஸ், பின்னர் மேனேஜ்மென்ட் அக்கவுன்டென்ட் ஆக தகுதியை உயர்த்திக் கொண்டு கேபிள் & வையர்லெஸ் நிறுவனத்தில் எக்னாமிக் டைரக்டராக பதவியேற்றார். 2010 ஆம் ஆண்டு சௌத் வெஸ்ட் நார்போக் பகுதியில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றிக்கு முன்பு இரண்டு தேர்தலில் இவர் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு குழந்தை பாதுகாப்பு மற்றும் கல்வி துறையின் செயலாளராக பதவி வகித்தார். 

மேலும் செய்திகளுக்கு..வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. குடிநீர் விநியோகம் ரத்து.. பொதுமக்கள் கதி என்னவாகும் ?

அதை தொடர்ந்து சுற்றுச்சூழல், உணவு மற்றும் ஊரக விவகாரங்களுக்கான மாநிலச் செயலாளர் பதவி, கருவூல முதன்மை செயலாளர், சர்வதேச வர்த்தகத்திற்கான மாநில செயலாளர் மற்றும் வர்த்தக வாரியத்தின் தலைவர், பெண்கள் மற்றும் சமத்துவத்துறை அமைச்சர் பதவி, கடைசியாக வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் வளர்ச்சி விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலாளர் பதவியில் இருந்தார். இவரது ஆடைகள், படங்கள் போன்றவை பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சருடன் ஒப்பிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..“பிரதமர் பதவி டார்கெட்.! பாஜகவுக்கு எதிராக களமிறங்கிய ஸ்டாலின் - ராகுல் காந்தி” மாஸ்டர் பிளான் எடுபடுமா ?

click me!