ரிஷி சுனக்கை தோற்கடித்தார் லிஸ் டிரஸ்... நாளை பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்பு!!

By Narendran SFirst Published Sep 5, 2022, 5:50 PM IST
Highlights

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கை தோற்கடித்து லிஸ் டிரஸ் பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வாகியுள்ளார்.  

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கை தோற்கடித்து பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நபரை அரசின் கொறடாவாக்கியது, பணவீக்கத்தை கட்டுப்படுத்த தவறியது போன்ற சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளால் சொந்தக் கட்சிக்குள்ளேயே பொரிஸ் ஜோன்சனுக்கு எதிர்ப்பு எழுந்தது. அதனையடுத்து ரிஷி சுனக் உள்ளிட்ட கன்சர்வேடிவ் கட்சியின் அமைச்சர்கள் தொடர்ச்சியாக இராஜினாமா செய்யத் தொடங்கினர்.இதனால் பொரிஸ் ஜோன்சன் பாரிய நெருக்கடிக்குள்ளானார். இதன் காரணமாக வேறுவழியின்றி தனது பிரதமர் பதவியை கடந்த ஜூலை 7 ஆம் திகதி, பொரிஸ் ஜோன்சன் இராஜினாமா செய்தார். இதை அடுத்து பிரிட்டனின் புதிய பிரதமருக்கான தேர்தல் நடைபெற்றது.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு... பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்!!

இந்த தேர்தலில் 8 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் லிஸ் டிரஸ் மற்றும் ரிஷி சுனக் ஆகியோர் இறுதிப் போட்டியாளர்களாக இருந்தனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் ஏற்பட்டது. இருவரும் தேர்தல் பிரசாரத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக், வெளியுறவு அமைச்சர் லிஸ்டிரஸ் இடையே போட்டி நிலவியது. பிரித்தானியாவின் பிரதமர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கும் நிலையில், தலைவர் பதவிக்கான தேர்தலில் 2 லட்சம் உறுப்பினர்கள் வாக்களித்தனர். 

இதையும் படிங்க: சீனாவில் சக்திவாய்ந்த பூகம்பம் ! அடுத்தடுத்து இரு நிலநடுக்கம்: சேதங்கள் தெரியவில்லை!

புதிய தலைவரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1.60 லட்சம் பேர் தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்தனர். வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி அறிவிக்கப்பட்ட தேர்வு முடிவில் ஆளும் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதில் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரிசி சுனக்கை தோற்கடித்து பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வானார். இதை அடுத்து நாளை இங்கிலாந்து ராணியை சந்தித்து ஆசி பெற்ற பின்னர் பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!