ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு... பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்!!

By Narendran SFirst Published Sep 5, 2022, 4:23 PM IST
Highlights

ஆப்கானிஸ்தானில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் இரண்டு ரஷ்ய அதிகாரிகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 ரஷ்ய அதிகாரிகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து உள்நாட்டு போரை தீவிரப்படுத்திய தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். இதை அடுத்து அங்கு தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க: சீனாவில் சக்திவாய்ந்த பூகம்பம் ! அடுத்தடுத்து இரு நிலநடுக்கம்: சேதங்கள் தெரியவில்லை!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்றது முதலே தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்க படைகள் வெளியேறிய மறுநாளே அங்கு பெரிய அளவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அங்குள்ள மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

இதையும் படிங்க: கனடாவில் பயங்கரம்! கத்திக்குத்தில் 10 பேர் கொலை: 12 பேர் படுகாயம்: பிரதமர் ஜஸ்டின் அதிர்ச்சி

இந்த நிலையில் இன்று நண்பகல் 12.40 மணி அளவில் காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு வெளியே விசாவிற்காக ஏராளமானோர் காத்திருந்த நிலையில், அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் தூதரகத்தில் பணியாற்றிய இரண்டு ரஷ்ய அதிகாரிகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

click me!