stabbing: cananda:கனடாவில் பயங்கரம்! கத்திக்குத்தில் 10 பேர் கொலை: 12 பேர் படுகாயம்: பிரதமர் ஜஸ்டின் அதிர்ச்சி

By Pothy RajFirst Published Sep 5, 2022, 9:23 AM IST
Highlights

கனடாவில் சாஸ்காட்ச்வென் மாகாணத்தில் நேற்று இரு சமூகத்தினரிடையே நடந்த மோதலில் 10 பேர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர், 12க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கனடாவில் சாஸ்காட்ச்வென் மாகாணத்தில் நேற்று இரு சமூகத்தினரிடையே நடந்த மோதலில் 10 பேர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர், 12க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த கத்திக்குத்து தொடர்பாக டேமியன் சான்டர்ஸன்(வயது31), மைல்ஸ் சான்டர்ஸன்(வயது31) ஆகிய இருவரையும் போலீஸார் இருவரை தேடி வருகிறார்கள். எதற்காகஇந்தக் கத்திக்குத்து நடந்தது, ஏன் 10 பேர் கொல்லப்பட்டார்கள் என்ற விவரம் போலீஸாருக்கு இதுவரை தெரியவில்லை. 

லண்டனில் இருந்து திருடப்பட்ட சொகுசு கார்… கராச்சியில் சுங்கத் துறையினரால் மீட்பு!!

சாஸ்காட்ச்வென் மாகாணத்தின் வடகிழக்கில் உள்ள சஸ்காடூன் பகுதியில் உள்ள வெல்டன் கிராமத்தில் இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்தது. இந்த வெல்டன் கிராமத்தில் ஜேம்ஸ் ஸ்மித் க்ரீநேஷன் என்ற சமூகத்தினர் வாழ்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக 3400 மக்கள் இருக்கும் இந்த சமூகத்தில் வெல்டன் கிராமத்தில் மட்டும் 200 பேர் வசிக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் விவசாயம், வேட்டையாடுதல், மீன்பிடிதொழில் செய்து வருகிறார்கள்

இந்த கத்திக்குத்து சம்பவம் குறித்து ராயல் கடனா மவுன்டட் போலீஸ் துணை ஆணையர் ரோண்டா பிளாக்மோர் கூறுகையில் “  நாங்கள் சந்தேகப்படும் இருவர் குறிப்பிட்ட சிலரை மட்டும் கத்தியால் குத்தியுள்ளனர். அதன்பின் தங்கள் கண்ணில் படும் நபர்களை எல்லாம் கத்தியால் குத்திதப்பியுள்ளனர். இந்த கத்திக்குத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. நாங்கள் இந்தத் தகவல் கிடைத்து அங்கு சென்று பார்த்தபோது, 13 பேர் கத்திக்குத்துக் காயங்களுடன் கிடந்தனர். 

narendra modi: jagan: adani:பிரதமர் மோடி, கெளதம் அதானி, ஆந்திரா முதல்வர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு

போலீஸார்  விசாரணையில் சாஸ்காட்ச்வென் தலைநகரான ரெஜினா நகரில் நேற்று பிற்பகலில் ஒருகாரில் கத்திக்குத்தில் ஈடுபட்ட இருவர் இருந்ததாக அங்கிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர். நாங்கள் சந்தேகப்படும் நபர்கள் குறித்த புகைப்படங்களை ரெஜினா நகரில் ஒட்டியுள்ளோம்.இருவரையும் பார்த்தால் உடனடியாக தகவல் கொடுக்கவும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். 

இதில் டேமியன் சான்டர்ஸன் 5 அடி 7இன்ச் 155 பவுண்ட் எடை இருப்பார், மைல்ஸ் சான்டர்ஸன் 6அடி உயரம், 200 பவுண்ட் எடை இருப்பார். இருவரும் கறுப்பு நிற நிசான் காரில் சென்றதை மக்கள் பார்த்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏர்ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தனவர்கள் பல்வேறு மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ரெஜினா மற்றும் சாஸ்காடூன்,மெல்போர்ட் உள்ள மருத்துவமனைக்கும் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்

united kingdom:gdp: 5-வது இடத்தில் இந்தியா! வீழ்ந்தது பிரிட்டன்! உலகப் பொருளாதாரத்தி்ல் 6வது இடத்துக்கு சரிவு

இந்த கத்திக்குத்து சம்பவம் குறித்து அறிந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில்பதிவிட்ட கருத்தில் “சாஸ்காட்ச்வென் மகாணத்தில் நடந்த தாக்குதல் கொடூரமானது, நெஞ்சை உறையவைக்கும் வகையில் உள்ளது.இந்தக் தாக்குதலில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்து நான் மிகுந்த வேதனைப்படுகிறேன். தொடர்ந்து இந்த விஷயத்தைபோலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள்.இதுகுறித்து முதலில் தகவல் அளித்தவர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
 

click me!