வால்மார்ட் இப்போ வெடிக்கும்.. அமெரிக்க போலீசுக்கு 'திகில்' காட்டிய விமானி - வசமாக சிக்கிய பின்னணி இதுதான் !

By Raghupati RFirst Published Sep 3, 2022, 9:07 PM IST
Highlights

மிசிசிப்பி மாகாணம் டூபலே நகரில் உள்ள வால்மார்ட் வணிக வளாக கட்டிடத்தை சிறிய ரக விமானம் மூலம் தகர்க்கப்போவதாக விமானி மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை சிறிய ரக விமானம்  ஒன்று மிசிசிப்பி மாகாணம் டூபலே நகரில் உள்ள வால்மார்ட் வணிக வளாகத்தை சுற்றி வந்துள்ளது. அப்போது அந்த சிறிய ரக விமானம் மூலம் வால்மார்ட் வணிக வளாகத்தை தகர்க்கப்போகிறேன் என்று மிரட்டல் விடுத்துள்ளான் விமானி ஒருவன். அமெரிக்காவின் மிசிசிப்பியின் டுபெலோவில் உள்ள உள்ளூர் வால்மார்ட் கடையில் விமானத்தை மோதவிடுவதாக அபிலட் மிரட்டியதாகக் கூறப்படும், கடை காலி செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

BNO News வெளியிட்ட வீடியோவில், ‘குறைந்த உயரத்தில் ஒரு விமானம் தலைக்கு மேல் வட்டமிடுவதைக் காட்டுகிறது. அமெரிக்க நேரப்படி (அதிகாலை 5 மணிக்கு) வட்டமிட தொடங்கியது. சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காற்றில் பறந்தது.

மேலும் செய்திகளுக்கு..திமுகவுடன் கைகோர்க்கும் மக்கள் நீதி மய்யம்.. ஆளுநர் ஆர்.என் ரவிக்கு முட்டுக்கட்டை போட்ட கமல் !

அப்போது சிறிய ரக விமானி ஒருவர் ஆப்ரேட்டரைத் தொடர்பு கொண்டு, ‘வேஸ்ட் மெயினில் உள்ள வால்மார்ட்டில் வேண்டுமென்றே மோதிவிடுவோம் என்று மிரட்டினார்’ என்று காவல்துறை கூறியது. அந்த நிலையில் வால்மார்ட் மற்றும் அருகில் உள்ள ஒரு கன்வீனியன்ஸ் ஸ்டோர் காலி செய்யப்பட்டதாக டுபெலோ காவல் துறையை மேற்கோள் காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. அவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டதாகவும், அதிகாலை 5 மணியளவில் விமானி அவசர எண்ணுக்கு அழைத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

BREAKING: Pilot threatening to crash plane into Walmart in Tupelo, Mississippi, police say pic.twitter.com/znMlDj5M2N

— BNO News (@BNONews)

ஃப்ளைட்அவேர் இணையதளத்தில் இருந்து ஒரு வரைபடம், விமானத்தின் போக்கை, டுபெலோவை மையமாகக் கொண்ட ஒரு ஜிக்ஜாக் வடிவத்தைக் காட்டியது. மேலும் பொதுவாக ஆறு அல்லது ஏழு பயணிகள் அமரும் வசதியுடன் பீச்கிராஃப்ட் நிறுவனத்தால் கட்டப்பட்ட ‘கிங் ஏர் வகை’ என்ற வகையை என்றும் கூறியுள்ளது காவல்துறை.

இதுகுறித்து கவர்னர் டேட் ரீவ்ஸ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இந்த ஆபத்தான சூழ்நிலையை அனைவரும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். அனைத்து குடிமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். ஒருவழியாக விமானத்தில் உள்ள எரிபொருள் தீர்ந்ததால், தரையிறங்கியது. அப்போது அந்த விமானியை கைது செய்தனர் காவல்துறை.

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

click me!