பாகிஸ்தானில் பெய்துவரும் மழை, வெள்ளத்தால், அந்நாட்டின் மூன்றில் ஒருபகுதி தண்ணீரில் மூழ்கியுள்ளது என்று ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்ஸி(ஈஎஸ்ஏ) தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் பெய்துவரும் மழை, வெள்ளத்தால், அந்நாட்டின் மூன்றில் ஒருபகுதி தண்ணீரில் மூழ்கியுள்ளது என்று ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்ஸி(ஈஎஸ்ஏ) தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால், 2ம்நிலை பேரிழிவுகளும் வந்துள்ளன. வெள்ளத்தால், வேளாண் நிலங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளதாலும், ஆயிரக்கணக்கான கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் பசியால் வாடுகிறார்கள்.
பாகிஸ்தானில் கடந்த ஜூன் பிற்பகுதியில் இருந்து பருவமழை பெய்து வருகிறது. இந்த மழை வழக்கத்தைவிட 10 மடங்கு அதிகமாகும். சிந்து நதி பெருக்கெடுத்து ஓடுவதால், 10 கி.மீ அகலத்துக்கு வெள்ளநீர் பாய்கிறது என்று ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்ஸி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் மக்களுக்கு உணவுப் பற்றாக்குறையும், உடல்நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது. 2.70 கோடி மக்கள் வெள்ளத்தால் போதுமான உணவு இன்றி பட்டினியில் வாடுகிறார்கள், இந்த நிலை மேலும் மோசமாகும்.
பிரிட்டனைச் சேர்ந்த பேரிடர் எமர்ஜென்ஸி குழுவின்தலைவர் சலே சயீத் கூறுகையில் “ எங்கள் முன்னுரிமை மக்களைக் காக்க வேண்டும், அவர்களுக்கு உணவு வழங்கி மேலும் சூழல் மோசமாகாமல் தடுக்க வேண்டும். இந்த வெள்ளம் நினைத்துப் பார்க்க முடியாதசேத்ததைஏற்படுத்தியுள்ளது. வேளாண் நிலங்கள், கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன”எ னத் தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கூறுகையில் “ பாகிஸ்தான் ஏற்பட்ட வெள்ளத்தால், அடுத்ததாக விரைவாக தொற்றுநோய் பரவும் ஆபத்து இருக்கிறது. நீர்நோய்கள், தோல்நோய், நுரையீரல் நோய்கள், மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் ஏற்படும்” என எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 1,100 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் 400 பேர் குழந்தைகள். லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
பாகிஸ்தானில் ஏற்கென பொருளாதார பிரச்சினை, அரசியல் நிலையற்ற தன்மை நீடித்துவரும்நிலையில் வெள்ள பாதிப்பு அரசுக்கு பெரியசவாலாக மாறியுள்ளது.
flood in paksitan: பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம்: ஆயிரம் பேர் உயிரிழப்பு: சர்வதேச உதவி கோருகிறது
சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் பெய்தமழை சராசரியைவிட 500 சதவீதம் அதிகமாகும்.
காலநிலை மாற்றத்துக்கு பாகிஸ்தான் ஒருசதவீதம் பாதிப்பு செய்கிறது, சூழலுக்கு தேவையில்லாத வாயுக்களை வெளியிடுகறது. காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் மோசமான நாடுகளில் 8-வது இடத்தில் பாகிஸ்தான் இருக்கிறது.