லண்டனில் இருந்து திருடப்பட்ட சொகுசு கார்… கராச்சியில் சுங்கத் துறையினரால் மீட்பு!!

By Narendran SFirst Published Sep 4, 2022, 4:38 PM IST
Highlights

இங்கிலாந்தின் லண்டனில் இருந்து திருடப்பட்ட சொகுசு கார் பென்ட்லி முல்சானே பாகிஸ்தானின் கராச்சியில் சுங்கத் துறையினர் நடத்திய சோதனையின் போது மீட்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்தின் லண்டனில் இருந்து திருடப்பட்ட சொகுசு கார் பென்ட்லி முல்சானே பாகிஸ்தானின் கராச்சியில் சுங்கத் துறையினர் நடத்திய சோதனையின் போது மீட்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கராச்சியில் உள்ள டிஹெச்ஏவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாம்பல் நிற பென்ட்லி முல்சேன் - வி8 ஆட்டோமேட்டிக், VIN எண் SCBBA63Y7FC001375, இன்ஜின் எண் CKB304693 பற்றிய தகவல்களை கராச்சியில் உள்ள CCE-க்கு பிரிட்டிஷ் புலனாய்வு நிறுவனம் வழங்கியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வால்மார்ட் இப்போ வெடிக்கும்.. அமெரிக்க போலீசுக்கு 'திகில்' காட்டிய விமானி - வசமாக சிக்கிய பின்னணி இதுதான் !

இந்த தகவலின் உண்மைத்தன்மையை சரிபார்க்க அந்த இடத்தில் கடுமையாக கண்காணிக்கப்பட்டது. அதில் உயர்ரக கார் ஒரு வீட்டின் வராண்டாவில் நிறுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வாகனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: வெள்ளத்தில் மிதக்கும் பாகிஸ்தான்! மூன்றில் ஒருபகுதி நீரில் மூழ்கியது

Custom raided a house in DHA Karachi to recover Bentley which was allegedly stolen from London. pic.twitter.com/xoXvQIgiNO

— Usama Qureshi (@UsamaQureshy)

விசாரணையின் போது, இந்த கார் மற்றொரு நபரால் தனக்கு விற்கப்பட்டதாகவும் ஆவணங்களை சரிசெய்து தர அவர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுக்குறித்து ஒரு டிவிட்டர் பயனர் பதிவிட்டுள்ள வீடியோவில், ஒரு அழகான, சாம்பல் நிற பென்ட்லி கார், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காரை பலர் சேர்ந்து தள்ளி வண்டியில் ஏற்றுவதையும் காணலாம்.  

click me!