இப்படிப் பேசினால் மக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள்? ராகுலை விமர்சிக்கும் வெள்ளை மாளிகை பாடகர் மேரி மில்பென்

By SG Balan  |  First Published Jul 2, 2023, 10:53 AM IST

அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ பாடகர் மேரி மில்பென், ராகுல் காந்திக்கு ஓட்டு போட மக்கள் யோசிப்பார்கள் என்று சொல்லி இருக்கிறார்.


ராகுல் காந்தியின் பேச்சைக் கேட்டால் மக்கள் அவருக்கு வாக்களிப்பது மிகவும் கடினம் என்று தோன்றுவதாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ பாடகர் மேரி மில்பென் கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த மே 31ஆம் தேதி முதல் 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்று சான்பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் டிசி, நியூயார்க் ஆகிய மூன்று நகரங்களில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அங்கு அவர் இந்தியாவில் நடைபெறும் பாஜக ஆட்சி குறித்து விமர்சனங்களை முன்வைத்துப் பேசி இருந்தார்.

Latest Videos

undefined

ட்விட்டரில் எமர்ஜென்சியை அறிவித்த எலான் மஸ்க்! இனி தினசரி எக்கச்செக்க கட்டுப்பாடுகள்... முழுவிவரம் இதோ

அவரது பேச்சுகளுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ பாடகர் மேரி மில்பென் ராகுல் காந்தி குறித்துப் பேசியுள்ளார். அண்மையில் ராகுலின் அமெரிக்கப் பயணத்தின்போது அவர் ஆற்றிய சில உரைகளைக் கேட்டபோது அவருக்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் என்று எண்ணியதாக மேரி குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ பாடகி மேரி மில்பென் ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார். "ராகுல் காந்தியின் சில உரைகளைக் கேட்கும்போது, அவருக்கு மக்கள் வாக்களிப்பது மிகவும் கடினம் தோன்றுகிறது. ஒரு சிறந்த தலைவரின் அடையாளம், சொந்த நாட்டையும், அதன் பாரம்பரியத்தையும் மதிப்பதுதான்" என்று… pic.twitter.com/S5sC54oRll

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

"ராகுல் காந்தியின் சில உரைகளைக் கேட்கும்போது, அவருக்கு மக்கள் வாக்களிப்பது மிகவும் கடினம் தோன்றுகிறது. ஒரு சிறந்த தலைவரின் அடையாளம், சொந்த நாட்டையும், அதன் பாரம்பரியத்தையும் மதிப்பதுதான்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஜூன் 5ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பற்றி கடுமையாக விமர்சித்தார்.  "நாடு இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போரை எதிர்கொண்டிருக்கிறது. ஒன்று காங்கிரஸால் ஆதரிக்கப்படுகிறது, மற்றொன்றை ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் கருத்தியல் வாரிசான பாஜக ஆகியவை ஆதரிக்கின்றன என்றார்.

சில்லென்று மாறும் வானிலை! 8 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டித் தீர்க்கும்!

click me!