சிங்கப்பூரில், சட்டவிரோதமாக வைத்திருந்த 150,000 வெள்ளி மதிப்பிலான 190 லிட்டர் "codeine" என்ற இருமல் மருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக, பீஷானில் உள்ள மருந்தகத்தைச் சேர்ந்த 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்
சிங்கப்பூர் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அறிவியல் ஆனையம் இணைந்து சட்டவிரோ மருத்து பதுக்கலுக்கு எதிரான தடுப்பு முறைகளை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 190 லிட்டர் இருமல் மருந்து மற்றும் 680,000 வெள்ளி(சிங்கப்பூர் டாலர்) பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு சட்டவிரோத "Codeine" கும்பல்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரிய சோதனையாக கருதப்படுகிறது.
மேலும், இந்த சோதனையில் சட்டவிரோத இருமல் மருந்து, ரொக்கப் பணம், பலவகை மாத்திரைகள், 8 சிகரெட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக சிங்கப்பூர்க் காவல்துறை, சுகாதார அறிவியல் ஆணையம், சுகாதார அமைச்சகம் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கும்பல் பதிவுசெய்யப்படாத இருமல் மருந்துகளையும், மற்ற மருந்துகளையும் சேர்த்து விநியோகித்து வந்ததாக கூறப்படுகிறது. சிங்கப்பூரில் பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த இந்த கும்பல், பீஷானில் உள்ள உரிமம் பெற்ற மருந்தகத்துடன் தொடர்பிலு உள்ளது.
சிங்கப்பூரில் அதிகரித்த தற்கொலைகள்! கடந்த ஆண்டில் மட்டும் 476 பேர் தற்கொலை!
இந்த மருந்தக நிருவனத்திடம் சுகாதார அமைச்சகம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மருந்து நிறுவனம் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தால் அதன்மீது அமலாக்கதுறை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சோதனையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அதில் 4 பேர் சட்டவிரோத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. பதிவுசெய்யப்படாத அல்லது சட்டவிரோத சுகாதாரப் பொருள்களை இறக்குமதி, உற்பத்தி அல்லது விநியோகம் செய்ததாக நிரூபிக்கப்படுவோருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 50,000 வெள்ளி (சிங்கப்பூர் டாலர்) வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்
சிங்கப்பூரை உலுக்கிய கொலை வழக்கு.. சிறையில் உள்ள இந்திய வம்சாவளி பெண்ணுக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை..