Go Green SG | பசுமை வனமாகும் சிங்கப்பூர்! தொடங்கியது Go Green SG இயக்கம்!

By Dinesh TG  |  First Published Jul 1, 2023, 5:11 PM IST

சிங்கப்பூரை பசுமை வனமாகும் முயற்சியில் அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக Go Green SG இயக்கத்தை தொடங்கியுள்ளது.
 


பருவநிலை மாறத்தை எதிர்கொள்ளும் வகையில் சிங்கப்பூரை பசுமை வனமாகும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை ஊக்குவிக்க பல்வேறு நூற்றுக்கணக்கான நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.

அவை அனைத்தும், Go Green SG இயக்கத்தின் ஓர் அங்கமாக நடைபெறவுள்ளன. சிங்கப்பூரில் அடுத்த மாதத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட பசுமை வனமாக்கும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Go Green SG இயக்கத்தை, சிங்கப்பூர் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தொடங்கி வைத்தார். இதற்கு, 150 அரசாங்க அமைப்புகளும், தனியார் அமைப்புகளும் அவற்றை ஏற்றுநடத்த ஆதரவு தெரிவித்துள்ளன.

சிங்கப்பூர்: பூங்காக்களில் இரவு நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்

சுற்றுச்சுழலைக் பராமரிக்கவும், பருவநிலை மாற்றத்தைச் எதிர்கொள்ளவும் சிங்கப்பூர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு சமூகத்தில் ஆதரவைத் திரட்டுவதே Go Green SG இயக்கத்தின் நோக்கம் என துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

Go Green SG இயக்கத்தில், நீடித்த நிலைத்தன்மை முயற்சிகளை மேற்கொள்ளும் சுற்றுலாக்கள் மேம்பாடு, இயற்கைப் பகுதிகளைச் சுற்றிப்பார்த்தல் முதலியவை இச்செயல்பாடுகளில் அடங்கும். சிங்கப்பூரின் பசுமையான எதிர்காலத்தை உறுதிசெய்வதில், பொதுமக்களுக்கும் வர்த்தகங்களுக்கும் உதவ வேண்டும் என்றும் லாரன்ஸ் வோங் அழைப்பு விடுத்துள்ளார்.

Tap to resize

Latest Videos

உயரத்திலிருந்து வீசப்படும் குப்பை! - சாலையில் விழுந்தால் அபராதம்! தண்டனையும் காத்திருக்கு! எங்கு தெரியுமா?

சிங்கப்பூர்காரர்கள் சாப்பிடும் சர்கரை அளவை கடுப்படுத்த முயற்சி! டாப்பிங்ஸ், பானங்களில் சர்க்கரை அளவுடன் லேபிள்

click me!