அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகிய இருவரும் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கை மீறியும் இலங்கை தலைநகர் கொழும்புவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்ச அதிபர் மாளிகையை விட்டு தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம் மீண்டும் வலுத்துள்ள நிலையில், அந்நாட்டு தலைநகரில் காலவரையன்றி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. பாஜக கட்சிகாரர் என்றால் கைது செய்வீங்களா? திமுகவை கிழித்த அண்ணாமலை
மேலும், தலைநகர் கொழும்புவில் ராணுவம் மற்றும் காவல்துறை உஷார் நிலையில் இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.அந்நாட்டின் மதத் தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், மருத்துவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர், சிவில் உரிமை ஆர்வலர்கள், விவசாயிகள், மீனவர்கள் ஆகியோர் அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகிய இருவரும் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கை மீறியும் இலங்கை தலைநகர் கொழும்புவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
குறிப்பாக, அந்நாட்டின் அதிபர் மாளிகை முன் திரண்டு நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். காவல்துறையை மீறி அதிபர் மாளிகைக்குள் இவர்கள் நுழைய முயற்சி செய்தனர். இதையடுத்து போராட்டக்காரர்களை காவல்துறை கண்ணீர் புகைக்குண்டு வீச்சு போன்ற கடுமையான நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்த முயற்சித்தனர். பாதுகாப்பை மீறியும் அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்ததால், அதிபர் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு.. எடப்பாடி பழனிசாமி எடுத்த புது அஸ்திரம்.. ஓபிஎஸ் நிலைமை பாவம்.. புலம்பும் அதிமுக ஆதரவாளர்கள்!
அவர் காரில் தப்பி செல்லும் வீடியோவும் வெளியாகியுள்ளது. பத்திரமுல்லை பகுதியில் உள்ள ராணுவ மையத்தில் அதிபர் கோத்தபயா பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டின் பொருளாதார சூழல் மோசமான நிலையே தொடர்வதால் மக்கள் போராட்டம் மீண்டும் தீவிரமாக தலை தூக்கியுள்ளது. இந்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச ராணுவ தலைமையகத்தில் தஞ்சம் அடைந்திருக்கலாம் என்று இந்திய செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. சசிகலாவுடன் இணையும் திவாகரன்..12ம் கட்சி இணைக்கும் விழா - குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்!