ஒரு வேளை ஒன்றுக்கும் மேற்பட்டோர் தேர்வாகும் பட்சத்தில் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார்.
இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடி சூழல் ஏற்பட்டு இருக்கிறது. அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள் விலை உயர்வு, பற்றாகுறை, எரிபொருள் தட்டுப்பாடு என ஏராளமான பிரச்சினைகளால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
இதையும் படியுங்கள்: Sri Lanka : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 13ம் தேதி ராஜினாமா.. சபாநாயகர் தகவல் !
இந்த நிலையில், மக்கள் நடத்தும் போராட்டம் வலுப் பெற்று உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. நேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையை கைப் பற்றிய போராட்டக்காரர்கள், பொருட்களை கைப்பற்றியதோடு, அங்கேயே தங்கி உள்ளனர். இதோடு பிரதமர் பதவியில் இருந்து விலகிய ரணில் விக்ரமசிங்கே தனிப்பட்ட வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். போராட்டக்காரர்கள் வரும் முன்பே ரணில் விக்ரமசிங்கே வீட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேறி விட்டார்.
இதையும் படியுங்கள்: கொளுந்து விட்டு எரியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீடு.. போராட்டக்காரர்கள் தீ வைப்பு -வைரல் வீடியோ !
இதற்கும் முன் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமிசங்கே பதவி விலக வலியுறுத்தப்பட்டதை அடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதோடு அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலக வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதை அடுத்து ஜூல 13 ஆம் தேதி பதவி விலகுவதாக கோத்தபய ராஜபக்சே தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படியுங்கள்: கோத்தபய ராஜபக்சே சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா..! வைரலாகும் தகவல்
புதிய அதிபர்:
இலங்கை சட்ட விதிகளின் படி அதிபர் பதவி காலம் நிறைவு பெறும் முன் அதிபர் மாளிகை காலியானால், பாராளுமன்றத்தில் புதிய அதிபரை தேர்வு செய்து கொள்ள முடியும். இவ்வாறு தேர்வு செய்யப்படும் அதிபர் தனது பதவிக் காலம் முடியும் வரை மாளிகையில் வசிக்க முடியும். இதற்கான நடவடிக்கைகள் அதிபர் ராஜினாமா செய்த ஒரு மாத காலத்திற்குள் நடத்தப்பட்டு இருக்க வேண்டும்.
அதிபர் ராஜினாமா செய்த அடுத்த மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூடி, சபாநாயகர் அதிபர் ராஜினாமா செய்ததாக அறிவிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவர். ஒரு வேளை ஒன்றுக்கும் மேற்பட்டோர் தேர்வாகும் பட்சத்தில் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார்.
அதிபர் பதவி காலியாக உள்ள நிலையில், அந்நாட்டின் பிரதமர் அதிபராக பொறுப்பேற்க முடியும். இந்த காலக்கட்டத்தில் மந்திரிகளில் ஒருவரை பிரதமர் அலுவலகத்தில் பணியாற்ற வைக்க முடியும்.