எங்கே இருக்கிறார் ஷேக் ஹசீனா? உலகம் முழுவதும் அதிகம் கண்காணிக்கப்பட்ட வங்கதேச ஹெலிகாப்டர்!

By SG BalanFirst Published Aug 5, 2024, 9:58 PM IST
Highlights

திங்கட்கிழமை ஷேக் ஹசீனா பயணித்த வங்கதேசத்தின் விமானப்படை ஹெலிகாப்டர் AJAX1413, உலகம் முழுவதும் 29,000 க்கும் மேற்பட்டவர்களால் கண்காணிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்திருக்கும் ஷேக் ஹசீனாவின் ஹெலிகாப்டர் உலகளவில் அதிக அளவில் கண்காணிக்கப்பட்டுள்ளது.

Flightradar24 வலைத்தளத்தில் பயனர்கள் உலகெங்கிலும் உள்ள எந்த விமானத்தையும் நொடிக்கு நொடி கண்காணிக்க முடியும். இந்நிலையில், திங்கட்கிழமை ஷேக் ஹசீனா பயணித்த வங்கதேசத்தின் விமானப்படையின் C-130 போக்குவரத்து ஹெலிகாப்டர் AJAX1413, உலகம் முழுவதும் 29,000 க்கும் மேற்பட்டவர்களால் கண்காணிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

மாலை 4:30 மணியளவில், ஹெலிகாப்டர் உத்தரபிரதேசத்தின் வாரணாசிக்கு அருகில் இருந்தது. மாலை 6:30 மணியளவில், காசியாபாத்தின் ஹிண்டன் விமான தளத்தை அடைந்தது. அங்கிருந்து ஷேக் ஹசீனா தலைநகர் டெலிக்கு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து அவர் லண்டன் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உ.பி. காசியாபாத்தில் தரையிரங்கிய ஷேக் ஹசீனாவின் ஹெலிகாப்டர்! இந்தியாவில் தஞ்சம் அடைகிறாரா?

ஹசீனா எப்போது இந்தியாவில் இருந்து வெளியேறுவார் என்று தகவல் ஏதும் இல்லை. ஆனால், அதற்கு முன்பு அவர் இன்று இந்திய உயர் அதிகாரிகளை சந்திப்பார் எனக் கூறப்படுகிறது. லண்டன் செல்வதற்காக ஹசீனா இங்கிலாந்தில் புகலிடம் கோரி இருப்பதாகவும் இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ள அவரது சகோதரி ரெஹானாவும் அவருடன் செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை ஹசீனா இந்தியாவில் இருப்பார். ஹசீனாவுக்கு அரசியல் புகலிடம் வழங்குவது தொடர்பாக இங்கிலாந்திடம் இருந்து இதுவரை எந்த உறுதியான பதிலும் வரவில்லை.

76 வயதான ஹசீனா, நாடு முழுவதும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக எழுந்த போராட்டங்களைத் தொடர்ந்து தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். திங்கட்கிழமை பிரதமரின் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். நாளுமன்ற வளாகத்திற்குள் சென்ற போராட்டக்காரர்கள் வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையையும் தாக்கி உடைத்துள்ளனர்.

யார் இந்த முஜிபுர் ரஹ்மான்? வங்கதேசத்தில் இவரது சிலைகள் உடைக்கப்படுவது ஏன்?

click me!