ZombieDrug:அமெரிக்க மருத்துவர்களையும், மக்களையும் புதிய மருந்து அலற வைத்து வருகிறது. அந்த மருந்தைப் பயன்படுத்தும் மக்கள் திரைப்படத்தில் வரும் ஜாம்பிக்கள் போல் தசைகள் அழுகுகின்றன என்பதால் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
அமெரிக்க மருத்துவர்களையும், மக்களையும் புதிய மருந்து அலற வைத்து வருகிறது. அந்த மருந்தைப் பயன்படுத்தும் மக்கள் திரைப்படத்தில் வரும் ஜாம்பிக்கள் போல் தசைகள் அழுகுகின்றன என்பதால் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
சைலசின் என்றால் என்ன
undefined
ஜைலசின்(Xylazine) அல்லது டிராங்(tranq) என்று அந்த மருந்தை பயன்படுத்தும் மக்கள்தான் காலப்போக்கில் ஜாம்பிக்கள் போல் உடல் மாறுகிறது. இந்த மருந்தை பயன்படுத்தும் மக்களின் தோல், தசைகள் காலப்போக்கில் அழுகி, ஜாம்பிக்கள் போல் காட்சியளிக்கிறார்கள். இந்த சைலசின் மருந்தின் பயன்பாடு அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் பரவியுள்ளது அரசுக்கு பெரிய தலைவலியாக மாறிவிட்டது.
சைலசின் மருந்து என்பது ஒரு வகையான வலிநிவாரணி, மயக்க மருந்தாகும். கடந்த 1960களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மருந்தை பசு, குதிரை, ஆடுகள், செம்மறிஆடுகள், பன்றிகள் உள்ளிட்ட கால்நடைகளை மயக்கமடையச்செய்யவே இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சைலசின் மருந்து ஊசி சிரிஞ்சில் அடைக்கப்பட்டுதான் விற்பனைக்கு வரும். கால்நடைகளுக்கான மருந்து என்பதால் அரசுஇதை கட்டுப்படுத்தவில்லை. இந்த மருந்தை ஆன் மூலம் வாங்கும்போது பவுடர் போன்று வரும் இதில் சலைன்வாட்டர் சேர்த்து திரவமாகப் பயன்படுத்த முடியும்.
பின்விளைவுகள்
இந்த சைலசின், மயக்க மற்றும் வலிநிவாரணியான பென்டானில்(fentanyl) மருந்து வகையைச் சேர்ந்தது. இந்த மருந்து மனிதர்களுக்கு உயிருக்கு ஆபத்தானது. சிறிய அளவில் எடுக்கும்போது, ஹெராயின், அபின் போன்று கடும் போதை கிளர்ச்சியை மனிதர்களுக்கு ஏற்படுத்தும். ஆனால் காலப்போக்கில் இந்த மருந்து பயன்படுத்துவது தொடர்ந்தால், கொடூரமான பின்விளைவுகள் ஏற்படும். அதாவது ஜாம்பிக்கள் போல் உடல் உறுப்புகள், தோல், தசைகள் அழுகத் தொடங்கும்.
அறிகுறிகள், ஆபத்து
இந்த சைலசின் மருந்தை பயன்படுத்துவோர் அதிகநேரம் போதையில் இருப்பார்கள், காலப்போக்கில் சுவாசக் கோளாறு ஏற்படும், திடீரென உடலில் தோல்பகுதி பாளம்பாளமாக வெடித்து காயம் உண்டாகும். அந்த காயம் பெரிதாகி, பரவி, அழுகத் தொடங்கும். இதை கவனிக்காமல், சிகிச்சை எடுக்காமல் இருந்தால், தோல் அழுகி, உயருக்கே ஆபத்தாக முடியும். ரத்த அழுத்தம் ஏற்படும், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, படிப்படியாக இதயத்துடிப்பு குறைந்து மரணத்தை எட்டுவோம்
கோகைன், ஹெராயின், பென்டானில், சைலசின் ஆகிய மருந்துகள், உடலின் எடையைக் கூட்டுவதற்காக, உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி எடுப்போருக்கு வழங்கப்படுவதாகும். இந்த வாய்வழியாக உட்கொள்ளக்கூடாது, ஊசி வழியாகயாகவே உடலில் செலுத்தமுடியும்
உக்ரைனிலிருந்து ரஷ்யா வெளியேற வேண்டும்| ஐநா வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா, சீனா தவிர்ப்பு
பரவும் சைலசின்
பெலடெல்பியா மாகாணத்தில் மருத்துவர் ஆன்ட்ரூ பெஸ்ட் கூறுகையில் “ சமீப காலமாக மருத்துவமனைக்குவரும் நோயாளிகள் உடலில் இதுவரை பார்த்திராத வகையில் காயங்கள் உள்ளன. அந்தக் காயங்கள் ஆழமாகவும், துளையாக உள்ளன. வழக்கமான காயத்தைப் போல் வேகமாகவும் ஆறுவதில்லை, காயம் குணமாக மாதக்கணக்கில் ஆகிறது, சில நேரங்களில் ஆண்டுகளாகிறது. தீவிரமான நோயாளிகளுக்கு சம்பந்தப்பட்ட உறுப்பை வெட்டி எடுக்க வேண்டும். சைலசின் மருந்துப் பயன்பாடு அதிகரித்துவருவது கவலையளிக்கிறது. இந்த மருந்து அமெரிக்காவில் மெல்ல மக்கள் மத்தியில் பரவி வருவது அச்சமாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்
2021ம் ஆண்டில் பிலடெல்பியா, நியூயார்க்கில் மட்டும் சைலசின் மருந்து பயன்படுத்திய 2660 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜைலசின் மருந்து பயன்படுத்திய 28வயதான சாம் என்றஇளைஞர் கூறுகையில் “ சில மாதங்களுக்கு முன்புவரை எனக்கு எந்தக் காயமும் இல்லை, ஆனால், தற்போது என் கால்கள், பாதங்களில் துளைகள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.