தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அமைந்துள்ள குட்டி தீவு நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
இந்தோனேசியாவில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இதனால் பீதி அடைந்த மக்கள் அலறியடித்து கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்மடைந்தனர்.
தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் குட்டி தீவு நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மட்டுமின்றி அவ்வப்போது எரிமலை வெடிப்புகளும் நிகழ்கின்றன. இந்நிலையில், இந்தோனேசியாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. அதிகாலையில் தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததை அடுத்து அலறியடித்து கொண்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.
undefined
இந்த நிலநடுக்கம் டொபெலோ கடலுக்கு அடியில் 177 கிலோ மீட்டர் தூரத்தில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் நிலநடுக்கத்தால் பொருட்சேதம், உயிர்சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி அதிகாலை வேலையில் துருக்கி, சிரியாவில் அண்மையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 47,000க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதேபோல் இந்தியாவிலும் பல மாநிலங்களில் நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.