உக்ரைனில் இருந்து ரஷ்யா உடனடியாக வெளியேற வேண்டும் எனக் கோரி ஐ.நா. சபையில் நேற்று கொண்டுவரப்பட்ட தீர்மானித்தில் வாக்கெடுப்பில், பங்கேற்காமல் இந்தியா, சீனா தவிர்த்துவிட்டன.
உக்ரைனில் இருந்து ரஷ்யா உடனடியாக வெளியேற வேண்டும் எனக் கோரி ஐ.நா. சபையில் நேற்று கொண்டுவரப்பட்ட தீர்மானித்தில் வாக்கெடுப்பில், பங்கேற்காமல் இந்தியா, சீனா தவிர்த்துவிட்டன.
உக்ரைன் நாடு மேற்கத்திய நாடுகளின் பக்கம் சாய்வதைத் தடுக்க, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. ஏறக்குறைய 6 மாதங்கள் வரை நடந்த போரில் இதுவரை இருதரப்பினருக்கும் பொருட் சேதம், உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓர் ஆண்டு நிறைவடைகிறது.
உக்ரைன் நாட்டின் சில பகுதிகளை ரஷ்யா பிடித்துக்கொண்டு அங்கு தனது படைகளைக் குவித்துள்ளது. இருப்பினும் போர் முடிந்துவிட்டதாக ரஷ்யா இன்னும் அறிவிக்கவில்லை. எப்போது வேண்டுமானாலும் மீண்டும் போர் நிலவும் சூழல் நிலவுகிறது.ஆனால், மீண்டும் போர் நடைபெறாமல் தடுக்க உலக நாடுகள் பேசி வருகின்றன.
உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா மீது அமெரிக்கா, பிரி்ட்டன், ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தடை விதித்து ஓர் ஆண்டாகியுள்ளன. உக்ரைனுக்கு ஆயுதங்கள், நிதியுதவியை ஐரோப்பிய நாடுகளும், அமெரி்க்காவும் வழங்கி வருவதால், ரஷ்யாவுக்கு மேலும் ஆத்திரத்தை மூட்டியுள்ளது.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்து செல்லும்போது திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கிவ் நகருக்கு வந்திருந்தார். அங்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்து அதிபர் பைடன் பேசினார்.
அப்போது பேசிய அதிபர் பைடன் “ உக்ரைன் போரில் பலவீனமாக இருக்கிறது என ரஷ்யா தொடக்கத்தில்நினைத்து இறங்கியது முற்றிலும் தவறானது” எனத் தெரிவித்தார்.
இலங்கையில் மீண்டும் வெடித்தது போராட்டம்... அரசுக்கு எதிராக திரண்ட மக்கள்
இதற்கிடையே உக்ரைன் பகுதியில் இருந்து ரஷ்யா படைகள் உடனடியாக வெளியேறவேண்டும் என ஐ.நா.வில் நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 193 உறுப்பினர்கள் உள்ள ஐ.நா. பொதுச்சபையில் 141 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 7 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன, இந்தியா, சீனா உள்ளிட்ட 32 உறுப்பு நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்துவிட்டன.
ரஷ்யாவின் நெருங்கிய, நீண்டகால நட்பு நாடான இந்தியா, ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்படும் அனைத்து தீர்மானங்களையும் வாக்களிக்காமல் புறக்கணித்துவிட்டது. உக்ரைன் ரஷ்யா இடையே பேச்சு வார்த்தை மூலம் அமைதியைக் கொண்டுவர வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.
ஐ.நா. தீர்மானத்தில் “ ஐ.நா. கொள்கைகளுக்கு இணங்க உக்ரைனில் பரந்த, நியாயமான மற்றும் நீடித்த அமைதி விரைவில் அடைய வேண்டும்” என வலியுறுத்தியது.