நைஜீரியாவிலும் பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டதால் பழைய நோட்டுகளை மாற்ற முடியாமல் தவிக்கும் மக்கள் ஏடிஎம்களையும் வங்கிகளையும் சூறையாடுகின்றனர்.
இந்தியாவைப் போல நைஜீரியாவிலும் ஊழலை ஒழிக்கும் நோக்கத்தில் பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி புழக்கத்தில் உள்ள 200, 500 மற்றும் 1,000 நைரா நோட்டுகள் புழக்கத்தில் இருந்து விலக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 200 நைரா நோட்டுகள் மட்டும் ஏப்ரல் 10ஆம் தேதி வரை புழக்கத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதைப்பற்றிய அறிவிப்பு 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள 2023-ம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது. பின்னர் இந்த அவகாசம் பிப்ரவரி 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
ஆனால் பழைய நோட்டுகளுக்கு மாற்றாக புதிய நோட்டுகள் தேவையான அளவுக்கு புழக்கத்துக்கு வரவில்லை முடியவில்லை. அதிலும் வங்கிள் பணத்தை எடுக்க பல கட்டுப்பாடுகளை விதித்திருப்பதால் பழைய நோட்டுகளை மாற்ற முடியாமல் திண்டாடுகின்றனர்.
புதிய நைரா நோட்டுகளை போதிய அளவுக்கு புழக்கத்தில் விட விரைவாக ஏற்பாடு செய்ய வலியுறுத்தியும் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை குறைக்கக் கோரியும் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். அரசு அலுவலகங்கள், வங்கிகள், பிரதான சாலைகள் ஆகியவற்றில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஆத்திரம் அடைந்த சிலர் வங்கிகளையும் ஏடிஎம் மையங்களையும் தாக்கி நாசம் செய்கின்றனர். ஒருசில இடங்களில் வங்கிக்கு தீ வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நைஜீரியா நாட்டின் அதிபர் தேர்தல் பிப்ரவரி 25ஆம் தேதி (நாளை மறுநாள்) நடைபெற இருக்கும் சூழலில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் அந்நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.
Salman Rushdie: எழுத்தாளர் சல்மான் ருஷ்டியைத் தாக்கியவருக்கு நிலத்தை பரிசளிக்கும் ஈரான்
அந்நாட்டு அதிபர் முகமது புகாரி பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறுகிய கால அளவிலும் நீண்ட கால அளவிலும் பலன்களை அளிக்கக்கூடியது என்றும் ரொக்க பணத்தைக் குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாறும்போது ஊழல் ஒழிக்கப்படும் என்றும் கூறிவருகிறார்.
இந்தியாவில் 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அவற்றிற்குப் பதிலாக புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன.
26 பெண்களை திருமணம் செய்த 60 வயது முதியவர்.. மொத்தம் 100 கல்யாணம் பண்ணனும்.. முதியவரின் விபரீத ஆசை!