இலங்கையில் மீண்டும் வெடித்தது போராட்டம்... அரசுக்கு எதிராக திரண்ட மக்கள்

By Narendran S  |  First Published Feb 23, 2023, 6:13 PM IST

மின்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


மின்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது. மேலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். குழந்தைகளை வைத்திருக்கும் மகளின் பாலுக்கு கூட போராடும் நிலை ஏற்பட்டது. சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக இலங்கை மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தனர். இதனால் இதற்கு காரணமாக இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

இதையும் படிங்க:  எழுத்தாளர் சல்மான் ருஷ்டியைத் தாக்கியவருக்கு நிலத்தை பரிசளிக்கும் ஈரான்

Tap to resize

Latest Videos

பின்னர் புதிய அதிபராக ரணில்விக்ரமசிங்க பதவியேற்றார். இருந்தபோதிலும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி இன்னும் சரியாகவில்லை. மக்கள் இன்னுமும் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு போராடுபவர்களை ராணுவத்தைக் கொண்டு அடக்கும் முயற்சிகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதனிடையே அண்மை காலமாக பல்வேறு வரிகளை இலங்கை அரசு உயர்த்தியுள்ளது. கடந்த 16 ஆம் தேதி மின்சார கட்டணம் 66 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் மக்கள் தற்போதைய வரி உயர்வால் அதிர்ச்சியடைந்தனர்.

இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் விவேக்கின் பெற்றோர் யார்? பூர்வீகம் எது?

இதை அடுத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இலங்கை மக்கள் உடனடியாக மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் கொழும்புவில் கூடிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தான் 200 சதவீதம் வரை மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இந்த  நிலையில் தற்போது மேலும் 66 சதவீதம் வரை மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

click me!