Salman Rushdie: எழுத்தாளர் சல்மான் ருஷ்டியைத் தாக்கியவருக்கு நிலத்தை பரிசளிக்கும் ஈரான்

Published : Feb 23, 2023, 01:25 PM ISTUpdated : Feb 23, 2023, 07:10 PM IST
Salman Rushdie: எழுத்தாளர் சல்மான் ருஷ்டியைத் தாக்கியவருக்கு நிலத்தை பரிசளிக்கும் ஈரான்

சுருக்கம்

அமெரிக்க வாழ் இந்திய எழுத்தாளரான சல்மான் ருஷ்டியைத் தாக்கியவருக்கு ஈரான் இஸ்லாமிய அமைப்பு பரிசு அறிவித்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் தாக்கிய அமெரிக்க இளைஞருக்கு ஈரானைச் சேர்ந்த அமைப்பு 1000 சதுர மீட்டர் நிலத்தை பரிசாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசித்துவரும் ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. 75 வயதாகும் இவர் 1981ஆம் ஆண்டு வெளியான ‘நள்ளிரவின் குழந்தைகள்’ (Midnight's Children) நாவலுக்காக புக்கர் பரிசு பெற்றவர். இவர் எழுதி 1988ஆம் ஆண்டு வெளியான 'சாத்தானின் வேதங்கள்' (The Satanic Verses) என்ற புத்தகத்தில் மதத்தை தவறாக சித்தரித்ததாக சர்ச்சை கிளம்பியது.

30 Days Paid Leave: திருமணம் ஆனவுடன் சம்பளத்துடன் 30 நாள் விடுமுறை! சீன அரசு அறிவிப்பு

இந்நிலையில், கடந்த ஆண்டு சல்மான் ருஷ்டியை கத்தியால் தாக்கிய அமெரிக்க இளைஞருக்கு 1,000 ச.மீ. விவசாய நிலத்தை பரிசாக வழங்குவதாக ஈரான் நாட்டு இஸ்லாமிய அமைப்பு அறிவித்துள்ளது. அவருக்கோ அவரது வாரிசுக்கோ இந்த நிலம் அளிக்கப்படும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

“சல்மான் ருஷ்டிக்கு சரியான தண்டனை கிடைத்துள்ளது. தற்போது அவர் உயிருடன் இருந்தும் பயன் இல்லை.” என அந்த அமைப்பைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் ஜரெயி தெரிவித்துள்ளார்.

1989ஆம் ஆண்டு ஈரான் நாட்டின் மூத்த மத தலைவராக இருந்த கொமேனி, சல்மான் ருஷ்டிக்கு மரண தண்டனை வழங்கும் பத்வா உத்தரவு பிறப்பித்தார். ருஷ்டியை கொன்றால் பரிசளிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. கொமேனி மறைவுக்குப் பின் ஈரான் அரசு ருஷ்டியைக் கொல்லும் பத்வா உத்தரவை திரும்பப்பெற்றது.

இருப்பினும் அவரது உயிருக்கு தொடர்ந்து ஆபத்து இருந்துவருகிறது. இஸ்லாமிய நாடுகள் பலவும் அவரது நூலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த சல்மான் ருஷ்டியை ஹாதி மாதர் என்ற இளைஞர் கத்தியால் சரமாரியாக தாக்கினார்.

Air India: எஞ்சினில் எண்ணெய் கசிவு! அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்

படுகாயமடைந்த ருஷ்டி தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது ஒரு கண் பார்வை பறிபோய்விட்டதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு தன்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருந்து இன்னும் மீளவில்லை என்று அண்மையில் கூறியிருந்தார்.

ருஷ்டியைத் தாக்கிய 24 வயது அமெரிக்க இஸ்லாமிய இளைஞர் ஹாதி மாதர் இப்போது அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜப்பானை உலுக்கிய 7.5 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!
பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!