தஜிகிஸ்தான் பகுதியில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.
தஜிகிஸ்தான் பகுதியில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியிருந்தது.
பிப்ரவரி மாதம் 6-ம் தேதி அதிகாலை வேலையில் துருக்கி - சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8ஆகப் பதிவாகி இருந்தது. அதேநாளில் அடுத்தடுத்து மூன்று முறை துருக்கி, சிரியா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 47,000க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். அங்குள்ள ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சீட்டு கட்டு போல் சரிந்து தரைமட்டமாகின. இது துருக்கியின் வரலாறு காணாத பேரிடர் என அந்த நாடு அறிவித்திருக்கிறது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதேபோல், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அவ்வப்போது நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. இந்தியாவை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், இன்று தஜிகிஸ்தான் பகுதியில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.
தஜிகிஸ்தானின் முர்கோப் நகருக்கு மேற்கே 67 கிலோமீட்டர் தொலைவில், 20 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:37 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.