G20 Summit:உக்ரைனில் போர் நிறுத்தம் தேவை:இன்றைய உரத் தட்டுப்பாடு நாளைய உணவுச் சிக்கல்: பிரதமர் மோடி பேச்சு

By Pothy RajFirst Published Nov 15, 2022, 10:07 AM IST
Highlights

உக்ரைனில் போர்நிறுத்தம் ஏற்படவும்,  இரு நாட்டு தூதரக வழியில் அமைதிப் பேச்சுக்கு திரும்ப முயற்சிக்க வேண்டும் என நான் பலமுறை தெரிவித்தேன் என்று பிரதமர் நரேந்திர மோடி ஜி20 உச்சி மாநாட்டில் வலியுறுத்தினார்.

உக்ரைனில் போர்நிறுத்தம் ஏற்படவும்,  இரு நாட்டு தூதரக வழியில் அமைதிப் பேச்சுக்கு திரும்ப முயற்சிக்க வேண்டும் என நான் பலமுறை தெரிவித்தேன் என்று பிரதமர் நரேந்திர மோடி ஜி20 உச்சி மாநாட்டில் வலியுறுத்தினார்.

இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள நுசா துவா எனும் தீவு ஹோட்டலில் 17-வது ஜி20 நாடுகள் உச்சி மாநாடு இன்று தொடங்கியது. ஜி-20 கூட்டமைப்பில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரேசில், கனடா, சீனா,ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் ஆகியவை பங்கேற்றுள்ளன.

G20 Summit 2022: ஜி20 உச்சி மாநாடு: அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு

இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று இந்தோனேசியா புறப்பட்டுச் சென்றார். ஜி20 உச்சி மாநாட்டின் முதல்நாளான இன்று, உணவுப் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: 

ஜி20 உச்சி மாநாடு - தலைமை பொறுப்பேற்கும் பிரதமர் மோடி.. எதை பற்றி விவாதிக்க போகிறார்கள் ?

கொரோனா பெருந்தொற்றுக்குப்பின், புதிய உலகை உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களில் உள்ளது. இங்கு நாம் கூடியிருக்கும் இந்த நேரம் என்பது, அமைதி, நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உறுதியான மற்றும் கூட்டுத் தீர்மானத்தை வெளிப்படுத்த வேண்டும்.

புத்தர் மற்றும் மகாத்மா காந்தியின் புனித பூமியில் ஜி20 உச்சி மாநாட்டில் நாம் கூடியிருக்கும்போது, உலகிற்கு அமைதிக்கான வலுவான செய்தியை தெரிவிக்க ஒப்புக்கொள்வோம் 

உக்ரைனில் போர்நிறுத்தம் ஏற்படவும்,  இரு நாட்டு தூதரக வழியில் அமைதிப் பேச்சுக்கு திரும்ப முயற்சிக்க வேண்டும் என நான் பலமுறை தெரிவித்தேன். கடந்த நூற்றாண்டில், இரண்டாம் உலகப் போர் உலகில் பேரழிவை ஏற்படுத்தியது. அதன் பிறகு பல தலைவர்கள் அமைதிப் பாதையில் செல்ல தீவிர முயற்சி மேற்கொண்டனர். இப்போது நாம் அதைச் செய்ய வேண்டும்.

இந்தியாவில் நிலையான உணவுப் பாதுகாப்புக்காக இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து வருகிறோம், முன்னோர்கள் பயன்படுத்திய தானியங்கள், பாரம்பரிய உணவுகளை, சிறுதானியங்களை ஊக்குவித்து வருகிறோம். சிறுதானியங்கள் உலகளவில் சத்துக்குறைபாட்டுக்கும், பசியையும் போக்கும்தன்மை கொண்டவை.  சிறுதானியங்களை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாட இருக்கிறோம்.

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று இந்தோனேசியா பயணம்: ஆலோசிக்கப்படும் அம்சங்கள்?

உலக நாடுகள் தீர்வு காணாவிட்டால், உரத்தில் இன்று நிலவும் தட்டுப்பாடு நாளை உணவுச்சிக்கலை உருவாக்கும். உரம் மற்றும் உணவுதானிய சப்ளையை நிலையானதாகவும், உறுதியானதாகவும் உருவாக்க வலுவான பரஸ்பர உறவை உருவாக்க வேண்டும்

2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பாதியளவு புதுப்பிக்கத் தக்க எரிசக்தியில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கும். கால அவகாசம், எளிய கடனுதவி போன்றவை வளரும் நாடுகளின் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கவும், அந்த நாடுகள் மின்சக்தியில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும் உதவும்.

மின்சக்தி, எரிசக்தி பாதுகாப்பு உலக வளர்ச்சிக்கு முக்கியமானது. இது உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரம். எரிசக்தி, மின்சக்தி உள்ளிட்ட ஆற்றல் சப்ளையில் நிலவும் எந்தத் தடையையும் நாம் ஊக்குவிக்க கூடாது, ஆற்றல் சந்தையும் நிலைத்தன்மையாக இருக்க வேண்டும். அந்த வகையில்  தூய்மையான எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலை உருவாக்க  இந்தியா உறுதிபூண்டுள்ளது

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்

click me!