உங்கமேல மரியாதை உள்ளது.எங்களுக்கு எதிராக ராணுவத்தை அனுப்புவது நல்லதல்ல. இந்தியாவுக்கு தாலிபன்கள் எச்சரிக்கை.

By Ezhilarasan Babu  |  First Published Aug 15, 2021, 11:18 AM IST

ஆப்கானிஸ்தான் தலைநகரின் பாதி பகுதியை தாலிபன்கள் கைப்பற்றி விட்டனர். அந்நாட்டின் தேசிய தலைநகரான காபூல், தாலிபான்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 


ஆப்கனிஸ்தான் உள்நாட்டுப் போரில் இந்தியா எந்தவிதமான ராணுவ  நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது, அப்படி ஈடுபடுவது அதற்கு நல்லது அல்ல என தாலிபன் கத்தார் மாகாண செய்தி தொடர்பாளர் சுஹைல் சாஹீன் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கும் அதன் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கும், மனிதாபிமான அடிப்படையில் இந்தியா மேற்கொண்ட வளர்ச்சி திட்டங்களுக்கான முயற்சிகளை தாலிபன் மனதார பாராட்டுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தாலிபன்களுக்கும்- ஆப்கனிஸ்தான் ராணுவத்திற்கும் இடையேயான உள்நாட்டுப் போரில் கடந்த 2001ஆம் ஆண்டு தலையிட்ட அமெரிக்கா தாலிபன் படைகளை விரட்டியடித்தது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி  அங்கிருந்த அமெரிக்க படைகள் வெளியேறி வந்த நிலையில்,  மீண்டும் தாலிபான்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது. 

Tap to resize

Latest Videos

ஆப்கானிஸ்தான் தலைநகரின் பாதி பகுதியை தாலிபன்கள் கைப்பற்றி விட்டனர். அந்நாட்டின் தேசிய தலைநகரான காபூல், தாலிபான்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கை ஓங்கும் அபாயத்தின் அறிகுறியாக இது கருதப்படுகிறது. தாலிபன் தீவிரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் நகரிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லோகர் மாகாணம் முழுவதையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு ஆதரவாக களமிறங்கியுள்ள அமெரிக்கா, வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது, நாளுக்குநாள் தாலிபான்களின் தாக்குதலும் அட்டூழியங்களும் அதிகரித்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்களை வெளியேறும்படி அந்தந்த நாடுகள் ஆபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றன.

தாலிபன்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள பகுதிகளில் பெண்களை தாலிபனுகள் கட்டாயத் திருமணம் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய தலைநகரான கந்தகாரும் தாலிபன்களிடம் விழும் சூழல் உருவாகி உள்ளது.விரைவில் அமெரிக்காவுடன் இணைந்து இந்திய ராணுவமும் தாலிபான்களுக்கு எதிராக களம் இருக்கக் கூடுமென தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில்,  இந்நிலையில் தாலிபானின் செய்தி தொடர்பாளர் சுஹைல் சாஹீன் இந்தியாவை எச்சரிக்கும் வகையில் கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது, இந்தியா ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் தலையிடுவதை தாலிபன்கள் விரும்பவில்லை,  இந்தியா ஆப்கனிஸ்தானில் எந்தவித ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளிலும் ஈடுபட கூடாது. ஒருவேளை ஆப்கனிஸ்தான் உள்நுழைந்து, ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுமெனில் அதன் தலைவிதியை அவர்களே எழுதிக் கொள்கிறார்கள் என்று அர்த்தம். 

ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த பிற நாட்டு ராணுவங்களில் நிலைமை என்ன ஆனது என்பதே அதற்கு நல்ல உதாரணம். அதே நேரத்தில் ஆப்கனிஸ்தானில், சல்மா அணை, சாலை மற்றும் பிற உட்கட்டமைப்பு திட்டங்கள் போன்றவற்றை மேற்கொள்ள மனிதாபிமான அடிப்படையில் இந்தியா மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டுகிறோம். ஆப்கனிஸ்தான் மக்களுக்கு, அணைகள், தேசிய திட்டங்கள், உட்கட்டமைப்பு மற்றும் ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி அதன் புனரமைப்பு, பொருளாதாரச் செழிப்பு என ஆப்கானிஸ்தான் மக்களுக்காக இந்தியா செய்துள்ள அனைத்தையும் நாங்கள் மனதார பாராட்டுகிறோம் என சாஹீன் பாராட்டியுள்ளார். 

ஆப்கனிஸ்தான் படைகள் மற்றும் தாலிபான்களுக்கு இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாணங்களில் அமைந்துள்ள தங்கள் தூதரகங்களில் இருந்து தங்களது ஊழியர்களை வெளியேற்றி வருகின்றன, இது குறித்து தெரிவித்துள்ள சாஹீன், எந்தவிதமான ராஜதந்திர உறவும் பாதிக்கும் வகையில் நாங்கள் செயல்பட மாட்டோம். எந்த நாட்டின் தூதரக அதிகாரிகளையோ அல்லது அதன் ஊழியர்களோயோ நாங்கள் ஓருபோதும் குறிவைக்க மாட்டோம். எங்கள் தரப்பில் இருந்து அவர்களுக்கு எந்த ஆபத்தும் நேரிடாது, நாங்கள் எந்த நாட்டு தூதரகத்தையும் குறி வைக்க மாட்டோம்,

இதை ஒரு முறை அல்ல நாங்கள் பலமுறை கூறி விட்டோம், ஆனாலும் இந்தியா போன்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்கள், தூதர்களை வெளியேறுமாறு கூறிவருகிறது, அது அவர்களின் முடிவு, ஆனால் எங்களது நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

click me!