கொரோனா ஊசி போட்டுக் கொள்ளாவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும்... கடும் எச்சரிக்கை..!

By Thiraviaraj RM  |  First Published Aug 7, 2021, 10:46 AM IST

தடுப்பூசி முகாம்களில் மணிக்கணக்கில் காத்து நின்று அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.


கொரோனா ஊசி போட்டுக்கொள்ளாதவர்களின் செல்போன்களின் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவித்துள்ளது பாகிஸ்தான்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் அலுவலகங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் மற்றும் போக்குவரத்து செல்ல தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்ததை அடுத்து பல்லாயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் தினமும் கொரோனா தடுப்பூசி மையங்களில் குவிந்து வருகின்றனர்.
பாகிஸ்தானில் இந்த வாரம் சில இடங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்கள் வரிசையாக ஒரு கிலோமீட்டர் தூரம் காத்திருந்து ஊசியை செலுத்திக் கொள்கிறார்கள். 

Tap to resize

Latest Videos

பாகிஸ்தானில் இதுவரையில் 10 லட்சத்து 58 ஆயிரத்து 405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்து 54 ஆயிரத்து 711 பேர் மீண்டுள்ளனர். 23 ஆயிரத்து 702 பேர் மீள முடியாமல் இறந்துள்ளனர்.

இந்த நிலையில் அங்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. அங்கு கூடுதலான எண்ணிக்கையில் தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு, முகாம்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என்று பாகிஸ்தான் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கிடையே தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிப்பு, அலுவலகம் வர அனுமதி மறுப்பு, சம்பளம் கிடையாது, ஓட்டல்கள்-வணிக வளாகங்களில் நுழைய அனுமதி ரத்து என அதிரடி நடவடிக்கைகளால் மக்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். 

தடுப்பூசி முகாம்களில் மணிக்கணக்கில் காத்து நின்று அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
 

click me!