அடேய் சீனாக்கார நீ பண்ண பாவத்துக்கு இன்னும் தண்டனை முடியல.. திரும்பிய பக்கமெல்லாம் பிரித்து மேயும் கொரோனா.

By Ezhilarasan BabuFirst Published Aug 5, 2021, 3:47 PM IST
Highlights

ஒட்டுமொத்த உலகையும் கொரோனாவால் சிக்க வைத்துவிட்டு தங்கள் நாட்டை மற்றும் காப்பாற்றிக் கொண்ட  சீனாவுக்கு இப்போது மிகப் பெரும் தலைவலி ஆரம்பித்துள்ளது. வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதுபோல சீனாவின்நிலை மாறியுள்ளது. தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் புதிய வகை டெல்டா வைரஸ் சீனாவில் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றை நாட்டிலிருந்தே மொத்தமாக அழித்து விட்டோம் என சீனா கொக்கரித்து வந்த நிலையில் அங்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இது அந்நாட்டை மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஒட்டு மொத்த உலகிற்கும் கொரோனாவை கொடுத்துவிட்டு அதிலிருந்து  சீனா தப்பித்து வந்த நிலையில், அங்கு மீண்டும் புதிய வகை டெல்டா வைரஸ் தலைகாட்ட தொடங்கியுள்ளது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் ஊபே மாகாணம் வூகானில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றியது. அது நாளடைவில் ஒவ்வொரு நாடாக பரவி ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ள. அது முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலையென கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வீரியம் குறையாமல் தாக்கி வருகிறது. முதல் அலையில் போது விரைவாக செயல்பட்டு அதிலிருந்து மீண்ட சீனா, கடந்த பல மாதங்களாக பெரிய அளவில் பாதிப்பு இன்றி தப்பித்துக் கொண்டது. 

ஆனால் சீனாவை தவிர ஒட்டுமொத்த உலக நாடுகளும் குரானாவின் பிடியில் சிக்கி ஏராளமான உயிர்களை பறிகொடுத்ததுடன், பொருளாதாரம் இழந்து தவிக்கின்றன. ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இந்த அவசர நிலையை பயன்படுத்திக்கொண்டு தனது பொருளாதாரத்தை மேலும் மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் சிலர் தொடர்ந்து  ஈடுபட்டுவந்தது. கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி அண்டை நாடுகளின் எல்லையில் அத்து மீறுவது,  அண்டை நாட்டுக்குள் நுழைந்து ஆக்கிரமிப்பு செய்வது போன்ற அடாவடித்தனங்களை சீனா கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் இந்திய எல்லைக்குள் நுழைந்து சீனா நடத்திய அத்துமீறலில் 20க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களை இந்தியா பறிகொடுத்ததை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. 

ஒட்டுமொத்த உலகையும் கொரோனாவால் சிக்க வைத்துவிட்டு தங்கள் நாட்டை மற்றும் காப்பாற்றிக் கொண்ட  சீனாவுக்கு இப்போது மிகப் பெரும் தலைவலி ஆரம்பித்துள்ளது. வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதுபோல சீனாவின்நிலை மாறியுள்ளது. தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் புதிய வகை டெல்டா வைரஸ் சீனாவில் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. அந்நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் நாஞ்சில் மாகாணத்தில் அந்த வைரஸ் தாக்கம் தென்பட தொடங்கியுள்ளது. கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி 414 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நாஞ்சிங் மற்றும் யாங்சோ நகரங்களில் அனைத்து உள்நாட்டு விமானங்களையும் ரத்து செய்யப்பட்டுள்ளது, மேலும் பெய்ஜிங்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 23 ரயில் நிலையங்களில் மூடப்பட்டுள்ளது.

அதேபோல் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாஜிவில் அனைத்து குடியிருப்பாளர்களும், சுற்றுலாப் பயணிகளும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். அங்கு கூடைப்பந்து லீக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நகரத்தில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய அனைத்து மக்களுக்கும் வைரஸ் தொற்று பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக ஹுனான் மாகான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  சீனாவில் மீண்டும் வைரஸ் தொற்று பரவ தொடங்கியிருப்பது அந்நாட்டிற்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
 

click me!