அடேய் பாகிஸ்தான்காரா.. உங்க வேலைய எங்ககிட்டயே காட்டுறீங்களா..? தலையில் அடித்து கதறும் சீனா..

By Ezhilarasan Babu  |  First Published Jul 21, 2021, 1:19 PM IST

பாகிஸ்தான் சீனா இடையே பல்வேறு  ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சீனாவில் பொருளாதார தாழ்வார திட்டத்தின் கீழ்  வடக்கு பாகிஸ்தானில் பக்துன்க்வா பிராந்தியத்தில் பேசு என்ற இடத்தில் மின் உற்பத்தி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. 


பாகிஸ்தானில் சீனப் பொறியாளர்கள் பயணித்த பேருந்தில் குண்டு வெடித்து 13 பேர் உயிரிழந்த சம்பவத்தில், விசாரணை நடத்த குழு ஒன்றை பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளதாக சீனா தகவல் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் சீனா இடையே பல்வேறு  ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சீனாவில் பொருளாதார தாழ்வார திட்டத்தின் கீழ்  வடக்கு பாகிஸ்தானில் பக்துன்க்வா பிராந்தியத்தில் பேசு என்ற இடத்தில் மின் உற்பத்தி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான கட்டுமான பணியில் ஏராளமான சீனர்கள் ஈடுபட்டுள்ளனர். அதற்காக சீன இன்ஜினியர்கள், சர்வேயர்கள், தொழிலாளர்கள், பஷீரின் என்ற இந்த இடத்தில் முகாமிட்டு தங்கி வருகின்றனர். இந்நிலையில் கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு அன்றாடம் பேருந்தில் அவர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி பணிக்குச் செல்ல சீன தொழிலாளர்கள் பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது திடீரென பேருந்தில் அதி பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

Tap to resize

Latest Videos

அதில் பேருந்து சுக்குநூறாக நொறுங்கியது. அதில் பயணித்த சீன தொழிலாளர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர், அதில் 3 பேர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். மொத்தம் 28 பேர் படுகாயமடைந்தனர். இது சீனாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது, உடனே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பாகிஸ்தான் பேருந்தில் இருந்த எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவே விபத்துக்கு காரணம் என கூறி உண்மையை திசை திருப்பியது. ஆனால் அதை ஏற்ப மறுத்த சீனா, அது குண்டுவெடிப்புதான் என உறுதிபட கூறியது. அதே நேரத்தில் பாகிஸ்தான் செய்தித்துறை அமைச்சர், விபத்துக்குள்ளான பேருந்தில் வெடிபொருட்கள் இருந்ததற்கான தடையும் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் மீது நம்பிக்கை இழந்த சீனா, பாகிஸ்தானில் ஏற்பட்ட இந்த வெடி விபத்து குறித்து விசாரணை நடத்த தங்கள் நாட்டில் இருந்து குழு ஒன்று அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறியது. 

இதற்கான அறிவிப்பை ஏற்கனவே சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், லிஜியான் கூறியுள்ளார். இந்த விபத்தை மிகத்தீவிரமாக எடுத்துக்கொண்ட சீனா விசாரணை நடத்தி நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சீன பொது பாதுகாப்பு மந்திரி ஜாவோ கெஜி  இந்த விபத்தில் உண்மையை வெளிக்கொணர சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்படும் என்று கூறியுள்ளார். இந்த குண்டுவெடிப்பு தொடர்பான குற்றவியல் விசாரணையில் உதவிசெய்ய தொழில்நுட்ப வல்லுநர் குழுவை சீன அனுப்பி உள்ளது என அவர் கூறினார். பாகிஸ்தானில் வாழும் சீன குடி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பாகிஸ்தானை அவர் கேட்டுக்கொண்டார்.

சீனாவும்- பாகிஸ்தானும் மிக நெருக்கமாக நட்பு பாராட்டி வருகிறது, ஆனால் பாகிஸ்தானில் சீன மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதே சீனாவின் நீண்ட நாளைய கவலையாக உள்ளது. சீனா பாகிஸ்தானில் பல பெரிய கட்டுமானங்களை நிர்மாணித்து வருகிறது. இந்த திட்டங்களில் பணியாற்றும் ஏராளமானோர் சீன குடிமக்களாக உள்ளனர். மொத்தத்தில் பாகிஸ்தானின் உட்கட்டமைப்பை மேம்படுத்த சீனா பல பில்லியன் டாலர்கள் பாகிஸ்தானில் வாரி இறைத்துள்ளநிலையில், தங்கள் நாட்டுக் குடிமக்கள் பாகிஸ்தானில் பலியாவது சீனாவுக்கு பாகிஸ்தான் மீது கோபத்தையும் ஆத்திரத்தையும் அதிகரிக்க செய்துள்ளது என்றே கூறலாம். 
 

click me!