கூகுளில் முட்டாள் அப்டினு தேடினா யார் படம் வருது தெரியுமா ? ஒரே காமெடி கலந்த அதிர்ச்சிதான் !!

Asianet News Tamil  
Published : Jul 21, 2018, 09:10 AM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
கூகுளில் முட்டாள் அப்டினு தேடினா யார் படம் வருது தெரியுமா ? ஒரே காமெடி கலந்த அதிர்ச்சிதான் !!

சுருக்கம்

we got trump image for search google for fool

கூகுள் இணையதளத்தில முட்டாள் என்ற வார்த்தையைத் தேடினால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பெயர் வந்து நிற்பது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் மீது பெரும் அதிருப்தியில் உள்ள சிலர் செய்த சதி வேலைதான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

.உலகின் மிகப் பிரபலமான கூகுள்இணையதளம்  மூலம் எது குறித்து தேடினாலும் அதற்கான தகவல் சட்டென்று நம்முன் வந்து நிற்கும். மிகவும் நம்பகத் தன்மை கொண்ட கூகுள் இல்லாமல் உலகமே இயங்காது என்ற நிலை தற்போது உள்ளது.

இந்நிலையில், கூகுளில் முட்டாள் (idiot) என்று தேடினால் ட்ரம்பின் புகைப்படங்கள் தெரிவது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

டொனால்டு ட்ரம்பிற்கு எதிராக இணையதள போராட்டத்தை மேற்கொள்பவர்கள், ரெட்டிட் எனும் இணையதளத்தில் அவர் படத்துடன் முட்டாள் என்ற வார்த்தையை இணைக்கும் நூதன போரட்டத்தில் இறங்கியுள்ளனர்.  இதற்கான பிரசாரங்களையும் சர்வதேச அளவில் வெளிப்படையாகவே அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இதனால், தேடலுக்கு கூகுள் உபயோகப்படுத்தும் ‘அல்காரிதம்’ இணையதளத்தில் முட்டாள் என தேடினால் ட்ரம்பிம் படத்தையும் சேர்த்து தேடி பயனருக்கு கொடுக்கிறது. 

கடந்த மே மாதம் கூகுளின் தேடலில் ‘பப்பு’ என்ற இந்தி வார்த்தைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் புகைப்படமும், ‘பேகு’ என்ற இந்தி வார்த்தைக்கு பிரதமர் மோடியின் படமும் கூகுளில் தெரிந்து சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது

PREV
click me!

Recommended Stories

ஈரான் உச்ச தலைவர் கமேனிக்கு என்ன ஆச்சு? பரவும் அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தான் - ஆப்கன் மோதல்: ஆபரேஷன் கசாப் லில் ஹக், 133 பேர் பலி