சுமார் அரை மணி நேரத்தில் 180 திமிங்கலங்கள் வேட்டை! ரத்த வெள்ளத்தில் கடற்கரை!

By vinoth kumar  |  First Published Aug 19, 2018, 2:36 PM IST

பெரோ தீவில் 180 திமிங்கிலங்கள் வேட்டையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரோ தீவில் அரை மணி நேரத்தில் 180 திமிங்கிலங்கள் வேட்டையாட்டப்பட்ட நிகழ்வால், கடற்கரை பகுதி முழுவதும் ரத்த வெள்ளத்தில் காட்சியளிக்கிறது.

பிரிட்டனில் அட்லாண்டிக் பெருங்கட பரப்பில் அமைந்துள்ளது தான் பெரோ தீவாகும். இப்பகுதியில் சாண்டாவாகு கடற்கரை உள்ளது. இந்த கிராமத்தில் திமிங்கில வேட்டையாடுவது வழக்கம். ஆனால் கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கண்டனங்கள் தெரிவித்தாலும் திமிங்கிலங்கள் வேட்டையாடப்பட்டு தான் வருகிறது. 

Latest Videos

அண்மையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர் ஆலஸ்டையர் வார்டு என்ற 22 வயது இளைஞர், தாம் பட்டப்படிப்பு முடித்ததை கொண்டாடும் வகையில், சாண்டாவாகு கடற்கரைக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது திமிங்கில வேட்டையாடப்படுவதை கண்டு திரைப்படமாக வெளியிட்டுள்ளார். சுமார் அரை மணி நேரத்தில் 180 திமிங்கிலங்கள் வேட்டையாடப்பட்டுள்ளது. இதில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பங்கேற்றதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த திமிங்கில வேட்டையால், கடற்பகுதி முழுவதும் ரத்தம் போல் காட்சியளித்ததாக அவர் தெரிவித்தார். 

click me!