பெற்ற மகனுக்கு மூன்று வேலை உணவு கொடுக்காமல் பல நாட்கள் பட்டினி போட்ட கொடூர மனம் படைத்த பெற்றோரை உக்ரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பெற்ற மகனுக்கு மூன்று வேலை உணவு கொடுக்காமல் பல நாட்கள் பட்டினி போட்ட கொடூர மனம் படைத்த பெற்றோரை உக்ரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
உக்ரைன் நாட்டில் ஒரு பெற்றோர், விலாடிக் என்கிற நான்கு வயது சிறுவனுக்கு நல்ல முறையில் சாப்பாடு கொடுக்காமல், கொடுமை படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைதொடர்ந்து, உடனடியாக சமூக ஆர்வலர்கள் போலீஸ் அதிகாரிகளின் துணையோடு அந்த வீட்டை முற்றுகையிட சென்றனர். முதலில் அவர்களை வீட்டிற்குள் விடாமல் தடுத்த அந்த சிறுவனின் பெற்றோர். அதிகாரிகள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவர்களை உள்ளே அனுமதித்தனர்.
வீட்டில் உள்ள ஒரு அறையில் உடலில் எந்த உடையும் இன்றி, படுக்க வைக்கப்பட்ட நான்கு வயது சிறுவனைப் பார்த்து அதிர்ந்து விட்டனர் அதிகாரிகள். கை, கால்களில் எழுபுகளில் ஒட்டிக்கொண்டிருந்த சதை, வயிறு உணவு இன்றி பெருத்தும் காணப்பட்டது. மொத்தம் அந்த சிறுவனின் எடை 7 கிலோ தான் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பின் ஒரு வழியாக அந்த சிறுவனை பெற்றோரிடம் இருந்து மீட்ட சமூக ஆர்வலர்கள், உடனடியாக மருத்துவ மனையில் அனுமதித்தனர். உணவு இன்றி, பலம் இல்லாமல் காணப்பட்ட இந்த சிறுவனுக்கு உணவு கொடுத்தபோது, அவன் உணவை பார்த்ததும் சந்தோஷத்தில் கத்தியதாகவும், அவன் மிகவும் பசியில் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பின் இது குறித்து அந்த சிறுவனின் பெற்றோரிடம் விசாரித்த போது, விலாடிக் குழந்தையாக இருந்த போது, உள்ளூர் மருத்துவமனையில் அவனை வைத்து சிகிச்சையளித்தது தான் இதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர். எனினும் இவர்களை உக்ரைன் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சிறுவனின் புகைப்படம் வெளியாகி பலரது நெஞ்சையும் பதற வைத்துள்ளது.