அமெரிக்காவில் தனது ஒரு மாத பெண் குழந்தையை தொட்டிலில் போடுவதற்கு பதில் மைக்ரோவேவ் அவனில் தாய் வைத்ததால் அந்த குழந்தை இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
அமெரிக்காவில் தனது ஒரு மாத பெண் குழந்தையை தொட்டிலில் போடுவதற்கு பதில் மைக்ரோவேவ் அவனில் தாய் வைத்ததால் அந்த குழந்தை இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் கன்சாஸ் நகரில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த தகவலை அறிந்த போலீசா சம்மந்தப்பட்ட வீட்டிற்குச் என்று சோதனை நடத்தினர். உயிரிழந்த குழந்தைக்கு பலத்த தீக்காயங்கள் இருப்பதை கண்டனர்.
குழந்தையை தூங்க வைக்க முயற்சித்த போது தவறுதலாக தொட்டிலுக்குப் பதிலாக மைக்ரோவேவ் அவனில் வைத்ததாகவும் கூறினார். மேலும் அந்த குழந்தையின் உடைகள் கருகிய நிலையில் இருந்தாகவும், குழந்தை அணிந்திருந்த டயப்பரும் எரிந்த நிலையில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த பெண்ணின் வீட்டில் புகை நாற்றம் வீசிய நிலையில், எரிந்த நிலையில் குழந்தை போர்வை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளனர்.
133 டன் சிக்கனைத் திருடி லேப்டாப், டிவி வாங்கிய கும்பல்! கியூபாவில் நூதன திருட்டு!
எனினும் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து போலீசார் விளக்கமளிக்க வில்லை. குழந்தையின் தாய் 26 வயதான மரிய தாமஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் மீது குழந்தையின் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீஸ் விசாரணையின் போது, தாத்தா தாமஸ் "தன் குழந்தையை தூங்குவதற்காக தவறுதலாக குழந்தையை தொட்டிலுக்குப் பதிலாக அடுப்பில் வைத்ததாகவும்" தனக்குத் தெரிவித்ததாகத் தெரிவித்தார்.
இந்த மோசமான சூழ்நிலைகளுக்கு குற்றவியல் நீதி அமைப்பு சரியான முறையில் பதிலளிக்கும் என்று தாங்கள் நம்புவதாக, ”என்று ஜாக்சன் கவுண்டி வழக்கறிஞர் ஜீன் பீட்டர்ஸ் பேக்கர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.மரிய தாமஸின் மனநலம் மோசமாக இருந்ததாக அவரின் தோழி தெரிவித்துள்ளார்.
'பயமா இருக்கு... ப்ளீஸ் இங்க வாங்க...' இஸ்ரேல் தாக்குதலில் சிக்கி பலியான பாலஸ்தீன குழந்தை
தாமஸ் தற்போது ஜாக்சன் கவுண்டி தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளார். குழந்தை ஆபத்தில் சிக்குவது மிசோரியில் A வகுப்புக் குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 10 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.