பாகிஸ்தான் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களில் காண்டம் வடிவிலான பலூன்கள்.. வைரல் வீடியோவால் சர்ச்சை..

By Ramya s  |  First Published Feb 11, 2024, 5:20 PM IST

பாகிஸ்தானில் ஒரு முன்னணி அரசியல் கட்சியின் ஆதரவாளர்களால் காண்டம் வடிவிலான பலூன்கள் பறக்கவிடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


பாகிஸ்தானில் ஒரு முன்னணி அரசியல் கட்சியின் ஆதரவாளர்களால் காண்டம் வடிவிலான பலூன்கள் பறக்கவிடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் இந்த பலூன்கள் பறக்கவிட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ ஏற்கனவே பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது. 

இந்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் தங்கள் எதிர்வினையை வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், சிலர் இதனை நகைச்சுவையாக பதிவிட்டு வருகிறனர். இந்த சம்பவம் எப்போது, எங்கு நடந்தது என்ற விவரம் தெரியவில்லை என்றாலும், தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

رفتار کی لائیو ٹرانسمیشن کے دوران عدیل اظہر نے انتخابی مہم کی ایک فوٹیج چلادی، دیکھیں پھر کیا ہوا۔۔ pic.twitter.com/3L3ipMQyUo

— Raftar (@raftardotcom)

Latest Videos

undefined

 

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் யார் ஆட்சி அமைப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆதரித்த வேட்பாளர்களில் 102 பேர் வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க அக்கட்சிக்கு இன்னும் 31 இடங்கள் தேவை. நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் 73 இடங்களிலும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன.

133 டன் சிக்கனைத் திருடி லேப்டாப், டிவி வாங்கிய கும்பல்! கியூபாவில் நூதன திருட்டு!

ராணுவ ஆதரவு பெற்ற நவாஸ் ஷெரீப்பின் கட்சி, பிபிபியுடன் கூட்டணி ஆட்சி அமைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நவாஸ் ஷெரீப்புக்காக ராணுவ தளபதி அசிம் முனீர் களமிறங்கினார். நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆட்சி அமைக்க முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதனிடையே  சில வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்ததாக எந்த குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் சில சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் தேர்தல்.. இம்ரான் கான் கைகாட்டும் நபரே அடுத்த பிரதமர் - PTI கட்சி தலைவர் பாரிஸ்டர் கோஹர் அறிவிப்பு!

click me!