#Unmaskingchina நண்பேண்டா... இந்தியாவுக்கு ஆதரவாக சீனாவை அலறவிடும் அமெரிக்கா... அணுசக்தி விமானங்களை இறக்கியது!

By Thiraviaraj RM  |  First Published Jul 4, 2020, 7:02 PM IST

பிரச்னைக்கும் சர்ச்சைக்கும் உரிய தென் சீனக் கடல் பகுதியில் ராணுவப் பயிற்சியில் பங்கேற்க அணுசக்தியால் இயங்கும் இரு விமானம் தாங்கி கப்பல்களை அமெரிக்கா அனுப்பி உள்ளது.


பிரச்னைக்கும் சர்ச்சைக்கும் உரிய தென் சீனக் கடல் பகுதியில் ராணுவப் பயிற்சியில் பங்கேற்க அணுசக்தியால் இயங்கும் இரு விமானம் தாங்கி கப்பல்களை அமெரிக்கா அனுப்பி உள்ளது.

தென் சீனக் கடலில் 90 சதவிகிதம் தனது ஆதிக்கத்துக்கு கீழ் உள்ளதாக சீனா கொக்கரித்து வருகிறது. இந்த கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து மூலம்  ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 டிரில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. சீனா பல பகுதிகளில் இராணுவ விமானநிலையங்களை அமைத்து வருகிறது.

Tap to resize

Latest Videos

புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளும் தென் சீனக் கடலின் சில பகுதிகளுக்கு உரிமை கோருகின்றன. இந்நிலையில் சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் ராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக அணுசக்தியால் இயங்கும் இரு விமானம் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது.

இந்தப் பகுதியில் சீனா தன் பலத்தைக் காட்டிவரும் நிலையில், இவ்விரு அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களும் பயிற்சிகளில் பங்கேற்று வருகின்றன. யுஎஸ்எஸ் ரொனால்ட் ரேகன், யுஎஸ்எஸ் நிமிட்ஸ் என்ற இரு விமானந் தாங்கிக் கப்பல்களும் தென் சீனக் கடலில் இருப்பதை அமெரிக்க கடற்படையும் உறுதி செய்துள்ளது. "பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்பதை எங்கள் கூட்டாளிகளுக்கு ஒரு தெளிவான சமிக்ஞையைக் காண்பிப்பதே இதன் நோக்கம்" என்று  ரொனால்ட் ரீகன் தலைமையிலான படைப்பிரிவின்  தளபதி ரியர் அட்மிரல் ஜார்ஜ் எம் விக்காஃப் தெரிவித்து உள்ளார்.

சீன -இந்திய மோதல் எழுந்துள்ள நிலையில் கூட்டாளிகளுக்கு ஒரு தெளிவான சமிக்ஞையை காண்பிப்பதே எங்கள் நோக்கம் என அமெரிக்கா கூறியிருப்பதன் பின்னணியில் இந்தியாவை நட்பு நாடாக கூறுவதாகவே பலரும் கருதுகின்றனர். சீனாவுக்கு எச்சரிக்கை கொடுப்பதாகவும் அமெரிக்காவின் கருத்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. 

click me!