உக்ரைனுக்குள் எளிமையாக போகலாம் என்று புதின் நினைத்தார்; மாறாக, அவர் நினைத்துப் பார்க்காத வலிமையின் சுவரைச் சந்தித்தார். ஆம், அவர் உக்ரேனிய மக்களை சந்தித்தார்.
உக்ரைனில் தாக்குதல் நடத்தினால் மேற்குலக மற்றும் நேட்டோ நாடுகள் எதிர்வினையாற்ற மாட்டார்கள் என புடின் தவறாக கணித்துவிட்டார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் ஜோ பைடன் இன்று உரையாற்றுகையில்;- அமெரிக்காவில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கிறோம். உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்துவது தவறான செயல். அதனால்தான் உலக நாடுகளால் ரஷ்ய அதிபர் புடின் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். உக்ரைனின் தலைநகரை சுற்றி ராணுவ வாகனங்களை மட்டுமே புதினால் நிறுத்த முடியும். அதேநேரம் உக்ரைன் மக்களின் இதயங்களை அவரால் எப்போதும் வெல்ல முடியாது. சுதந்திர உலகின் நிலையை புதினால் எப்போதும் குறைத்து விட முடியாது.
ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் இணைந்து அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தொழிலதிபர்கள் அமெரிக்காவில் வைத்திருக்கும் சொகுசு படகுகள், சொகுசு குடியிருப்புகள் மற்றும் தனியார் ஜெட் விமானங்கள் அனைத்தும் முடக்குவோம் என்றார். உக்ரைனுக்கு ராணுவம், பொருளாதாரம் போன்ற உதவிகளை வழங்கி, நட்பு நாடுகளுடன் இணைந்து அவர்களுக்கு ஆதரவாக இருப்போம்.
உக்ரைனுக்குள் எளிமையாக போகலாம் என்று புதின் நினைத்தார்; மாறாக, அவர் நினைத்துப் பார்க்காத வலிமையின் சுவரைச் சந்தித்தார். ஆம், அவர் உக்ரேனிய மக்களை சந்தித்தார். போர்க்களத்தில் புதின் ஆதாயம் பெறலாம். ஆனால், நீண்ட காலத்திற்கு அவர் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
மேலும், உக்ரைனில் போர் தொடுத்து வரும் ரஷ்ய படைகளுடன் அமெரிக்க படைகள் மோதாது எனவும் ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உக்ரைனில் தாக்குதல் நடத்தினால் மேற்குலக மற்றும் நேட்டோ நாடுகள் எதிர்வினையாற்ற மாட்டார்கள் என புடின் தவறாக கணித்துவிட்டார். நாங்கள் அவற்றுக்கு தயாராகவே இருந்தோம் என ஜோ பைடன் கூறியுள்ளார்.