உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்ய அதிபரி புதின் உத்தரவிட்டார். இதனையடுத்து, உக்ரைனில் 7வது நாளாக தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து பல்வேறு பொருளாதாரத்தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் இதை பொருட்படுத்தாமல் தாக்குதலை நடத்தி வருகிறார்.
ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்திலிருந்து எங்களைப் பாதுகாக்க தான் எங்களுடைய இலக்கு. உக்ரைன் நாட்டின் பகுதியை ஆக்கிரமிப்பது எங்களுடைய இலக்கு அல்ல என ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷெர்கெய் ஷோய்கு தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு கூட்டமைப்பான நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் தீவிர முயற்சி செய்துவந்தது. உக்ரைனின் இந்த முயற்சிக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்ய அதிபரி புதின் உத்தரவிட்டார். இதனையடுத்து, உக்ரைனில் 7வது நாளாக தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து பல்வேறு பொருளாதாரத்தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் இதை பொருட்படுத்தாமல் தாக்குதலை நடத்தி வருகிறார்.
ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு பின்வாங்காமல் உக்ரைனும் எதிர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த போரின் காரணமாக உக்ரைன் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா இந்த பயங்கரமான தாக்குதலின் காரணமாக இதுவரையில், 5,000 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் பெரும்பாலானவர்கள் ராணுவ வீரர்கள் என்றே கூறப்படுகிறது. அப்பாவி பொதுமக்களுக்கு உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் ரஷ்ய தரப்பிலும் 3000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பெலாரஸ் நாட்டில் வைத்து உக்ரைன் மற்றும் ரஷ்யா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், போர் குறித்து பேசிய ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷெர்கெய் ஷோய்கு;- ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்திலிருந்து எங்களைப் பாதுகாக்க தான் எங்களுடைய இலக்கு. உக்ரைன் நாட்டின் பகுதியை ஆக்கிரமிப்பது எங்களுடைய இலக்கு அல்ல. எங்களுடைய இலக்கை அடையும் வரை போர் தொடரும். போரிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.