"புடின் தப்பா நினைக்காதீங்க.. கண்டிப்பா வச்சு செய்வோம்.." அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரபரப்பு பேச்சு !!

By Raghupati R  |  First Published Mar 2, 2022, 6:15 AM IST

உக்ரைன் தலைநகர் கீவ் நகரை, ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.  உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.


இதற்கிடையில், போர் முடிக்கு கொண்டு வர உக்ரைன்- ரஷியா இடையே நேற்று பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளை சேர்ந்த உயர்மட்ட தூதுக்குழு அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, போரை உடனடியாக நிறுத்திவிட்டு ராணுவத்தை வெளியேற்றும்படி ரஷியா தரப்புக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்தது.

சண்டையை நிறுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது.  இந்நிலையில், உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள கெர்சன் நகரை ரஷிய ராணுவம் தாக்கத் தொடங்கியுள்ளது.

Tap to resize

Latest Videos

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கி வருகின்றன.  ஆனால், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை நேரடியாக ரஷியாவை எதிர்த்து இதுவரை சண்டையிடவில்லை. இந்நிலையில், அமெரிக்கா நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் இன்று உரையாற்றினார்.

இது தொடர்பாக ஜோ பைடன் கூறும்போது, ‘சர்வாதிகாரிகள் அவர்கள் செய்த ஆக்கிரமிப்பு செயலுக்கு விலை கொடுக்காத போது அவர்கள் மேலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனர் என்பதை நமது வரலாற்றின் மூலம் நாம் அறிந்துள்ளோம். அவர்கள் தொடர்ந்து முன்னேறி கொண்டே சென்று அமெரிக்கா மற்றும் உலகிற்கு அதிக செலவு, அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடுகின்றனர். 

புதினின் போர் திட்டமிடப்பட்ட மற்றும் தூண்டப்படாதது. ராஜாங்க ரீதியிலான முயற்சிகளை புதின் நிராகரித்துவிட்டார்.  மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என புதின் நினைத்துவிட்டார். மேலும், அவர் நம்மை நமது வீட்டிலேயே பிரிந்துவிடலாம் என நினைத்துவிட்டார். புதின் தவறாக நினைத்துவிட்டார்... நாங்கள் தயார்' என்றார்.

'நாங்கள் தயார்’ என்று பைடன் கூறுவது பொருளாதார ரீதியில் ரஷியா மீது மேலும் தடைகளை விதிப்பதா? அல்லது ரஷியா மீது நேட்டோ ராணுவ நடவடிக்கை எடுக்க உள்ளதா? என்பது குறித்த கேள்வியும்  தற்போது எழுந்து இருக்கிறது.  நேற்று கார்கீவ் நகரில் உள்ள முக்கியமான அரசு கட்டிடம் அருகில் பதுங்கி இருந்த இந்திய மாணவர் நவீன் சேகரப்பா குண்டுவீச்சுக்கு பலியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!