Ukraine-Russia War: உக்ரைனின் கீவை குறிவைத்த ரஷ்யா... மிக உயரமான டிவி கோபுரத்தின் மீது ஏவுகணை தாக்குதல்!!

Published : Mar 01, 2022, 10:12 PM IST
Ukraine-Russia War: உக்ரைனின் கீவை குறிவைத்த ரஷ்யா... மிக உயரமான டிவி கோபுரத்தின் மீது ஏவுகணை தாக்குதல்!!

சுருக்கம்

உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள உலகின் 2வது உயரமான டிவி கோபுரம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. 

உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள உலகின் 2வது உயரமான டிவி கோபுரம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது.  சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷியா பின்வாங்க தயாராக இல்லை. ஒருபுறம் பேச்சு நடத்த உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தபோதும், அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷியா இறங்கி உள்ளது. இந்த சூழலில் கீவ் நகர் அருகே ரஷிய ராணுவ படைகள் நெருங்கி உள்ளன. இந்த படைகள் வரிசையாக 40 மைல்கள் தொலைவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனிடையே கீவ் உக்ரைனில் நடந்து வரும் ரஷிய ராணுவ நடவடிக்கைக்கு மத்தியில், தற்போது கெர்சன் நகரை ரஷியா ராணுவம் தாக்கத் தொடங்கியுள்ளது.

உக்ரைனின் கீவ் நகரில் நிகழ்ந்த குண்டு வீச்சில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதல் அதிகரிக்கக்கூடும் என்பதால் இன்றே உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து இந்தியர்கள் அவசரமாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் ரயிலிலோ அல்லது வாகனங்களிலோ கீவ் நகரிலிருந்து எப்படியாவது வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள உலகின் 2வது உயரமான டிவி கோபுரம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷிய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது.

குறிப்பாக, அரசு கட்டிடங்கள், ராணுவ நிலையங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலில் உக்ரைனின் தலைநகர் கீவ், இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் சிதலமடைந்து வருகிறது. அந்த வகையில், கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது இன்று ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்தன. கீவ் நகரில் உள்ள உளவுத்துறையின் கட்டிடத்தின் அருகே வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு ரஷியா அறிவுறுத்தி இருந்தது. இந்தநிலையில், உக்ரைனுக்குள் புகுந்து  ரஷிய தலைநகர் கீவ் மற்றும் கார்கில் நகரை ரஷிய படைகள் குறித்து வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்-இல் உள்ள உலகின் 2வது உயரமான டிவி கோபுரம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் அன்டன் ஹெராஷ்செங்கோ தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இந்துக்களாக மாறிய 2 லட்சம் இத்தாலியர்கள்..! ஐரோப்பாவின் 2வது பெரிய பூர்வீக இந்து மக்கள் தொகை..! இந்தியாவை நேசிப்பதாக பூரிப்பு..!
அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு.. ஒரு மாணவர் பலி சந்தேக நபர் கைது!