ஹெச்1பி விசா: இந்தியர்களுக்கு குட் நியூஸ்!

By Manikanda Prabu  |  First Published Jun 28, 2023, 2:11 PM IST

ஹெச்1பி விசாக்களை உள் நாட்டிற்குள் புதுப்பிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த அமெரிக்க முடிவு செய்துள்ளது


ஹெச்1பி விசாக்களை உள் நாட்டிற்குள் புதுப்பிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த அமெரிக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. ஹெச்1பி விசாக்களை உள்நாட்டில் புதுப்பிப்பதற்கான அமெரிக்காவின் இந்த அறிவிப்பானது, இந்திய தகவல் தொழில்நுட்பத்துறைக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என சேவைகள் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் (SEPC) தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பில் இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் விரைவான இயக்கத்திற்கு உதவுவதுடன், சேவைகள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் எனவும், ஆன்-சைட் வாடிக்கையாளர்களுடனான, இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் உறவை எளிதாக்க உதவும் எனவும் SEPC தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

“இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் விரைவாக வெளிநாட்டில் உள்ள வாடிக்கையாளர்களின் இருப்பிடங்களுக்கு செல்லும்போது, தேவைகளை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். வலுவான உறவுகளை உருவாக்கவும், பொருத்தமான தீர்வுகளை வழங்கவும் முடியும். இந்த நேரடி ஈடுபாடு வாடிக்கையாளர் திருப்தியை அதிகரித்து வணிகத்தை அதிகரிக்கும். மீண்டும், மீண்டும் வணிகம் செய்ய ஊக்குவிப்பதுடன், தகவல் தொழில்நுட்பத்துறையின் ஏற்றுமதிக்கும் வழிவகுக்கும்.” என SEPC தலைவர் சுனில் ஹெச் தலாதி கூறியுள்ளார்.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப துறையின் முக்கிய சந்தையாக அமெரிக்கா இருப்பதால், ஹெச்1பி விசா தொடர்பான அந்நாட்டு அரசின் இந்த முடிவு, தகவல் தொழில்நுட்ப சேவைகளின் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு முன்பு ஐடி துறையின் ஏற்றுமதி வளர்ச்சிக்கான மதிப்பீடுகள் 8-12 சதவீதமாக இருந்தது. இந்த முடிவின் மூலம், ஐடியின் ஏற்றுமதி வளர்ச்சி 13-15 சதவீதமாக  உயர வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நியூயார்க் நகரில், இனி தீபாவளிக்கு பள்ளி விடுமுறை.. ஆனா இந்த ஆண்டு ஒரு ட்விஸ்ட்..

“H1B மற்றும் L விசாக்களை உள் நாட்டிற்குள் புதுப்பிக்கும் திட்டத்துடன், இந்திய குடிமக்கள் உட்பட, சில மனுக்களின் அடிப்படையில் தற்காலிக வேலை விசாக்களை உள்நாட்டில் புதுப்பிப்பிதற்கான சோதனை நடவடிக்கை இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும். H1B மற்றும் L விசாக்களை உள் நாட்டிற்குள் புதுப்பிக்கும் திட்டம் 2024ஆம் ஆண்டுக்குள் விரிவுபடுத்தப்படும் மற்ற தகுதியான விசாக்களும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.” என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஹெச்1பி விசா என்பது புலம்பெயர்ந்தோர் அல்லாதவர்களுக்கு வழங்கப்படும் விசா ஆகும். இந்த விசா, அமெரிக்க நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படும் சிறப்புத் தொழில்களில் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்த அனுமதிக்கிறது. இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் ஹெச்1பி விசாக்களையே நம்பியுள்ளன.

ஹெச்1பி விசாக்கள் ஒரே நேரத்தில் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அனைத்து H-1B விசா வைத்திருப்பவர்களுக்கும், அவர்களின் விசா புதுப்பிக்கப்படும் போது, அவர்களது பாஸ்போர்ட்டில் புதுப்பித்தல் தேதிகளுடன் முத்திரையிடப்பட வேண்டும். அவர்கள் அமெரிக்காவிற்கு வெளியே பயணம் செய்து, மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய விரும்பினால் இது கட்டாயம் தேவைப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, ஹெச்1பி விசா ஸ்டாம்பிங்கை அமெரிக்காவுக்குள் செய்ய முடியாது. உள்நாட்டிற்குள் அதனை புதுப்பிக்க முடியாது. அமெரிக்க தூதரகத்தில் மட்டுமே முத்திரையிட முடியும். அங்கு மட்டுமே புதுப்பிக்க முடியும். எனவே, அத்தகைய விசாக்களை வைத்திருப்பவர்கள், தங்களது  சொந்த நாட்டுக்கு வந்து, மீண்டும் விசாக்களை புதுப்பித்து செல்கின்றனர். இது வெளிநாட்டு விருந்தினர் பணியாளர்களுக்கும், வெளிநாட்டு ஊழியர்களுக்கும் மிகவும் சிரமமான நடைமுறையாக உள்ளது. குறிப்பாக விசா காத்திருப்பு நேரம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!