குடும்பத்தோடு சுற்றுலா.. பாரில் இருந்த 21 வகை "Cocktails".. அத்தனைக்கும் ஆசைப்பட்டு உயிரைவிட்ட டூரிஸ்ட்!

By Ansgar R  |  First Published Jun 28, 2023, 12:41 PM IST

CPR கூட சரியாக செய்யாமல் இருந்த நிலையில் சிறுது நேரத்தில் அந்த மனிதனின் உயிர் பிரிந்தது.  


குடி குடியை கெடுக்கும், குடி பழக்கம் வீட்டுக்கும், நாட்டிற்கும் மனிதனின் உயிருக்கும் கேடு தரும். இந்த வாசகத்திற்கு மீண்டும் சான்றாகியுள்ளார் ஒரு பிரிட்டிஷ் நாட்டு பிரஜை. கடந்த 2022ம் ஆண்டு இந்த நிகழ்வு நடந்தாக இந்த செய்தியை தற்போது வெளியிட்டுள்ள நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. ஜமைக்கா நாட்டிற்கு கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் தனது குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க சென்றுள்ள ஒரு பிரிட்டன் நாட்டவர். 

சம்பவம் நடந்த அன்று, அவர் செயின்ட் ஆன்ஸில் உள்ள ராயல் டெகாமரோன் கிளப் கரீபியன் என்ற மதுபான கடையில் மது அருந்தியுள்ளார். பாரின் லிஸ்டில் இருந்த 12 காக்டெய்ல்களை குடித்த பிறகு, அவர் தனது ஹோட்டல் அறைக்குத் திரும்பியுள்ளார். அவர் ரூமுக்கு சென்ற சில நிமிடங்களில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள் : திமுகவின் உண்மை முகம் இதுதான் - கொதிக்கும் TTV! 

உடனே அவருடைய உறவினர் அவருக்கு முதலுதவி செய்துள்ளார், உதவிக்காக கூச்சலிட்டும் வெகு நேரமாக யாரும் உதவிக்கு வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சட்டென்று பாதிக்கப்பட்டவரின் உடலில் உஷ்னம் குறைந்த நிலையில், நாடித்துடிப்பும் குறைய துவங்கியுள்ளது. 

வெகு நேரம் கழித்து அங்கு வந்த நர்சிடம், ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்துவிட்டேர்களா என்று உறவினர் கேட்டபோது அந்த பெண் சரிவர பதில் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. CPR கூட சரியாக செய்யாமல் இருந்த நிலையில் சிறுது நேரத்தில் அந்த மனிதனின் உயிர் பிரிந்தது.  

விசாரணையில், சம்பவத்தன்று அந்த ஹோட்டலுக்கு வந்த இரண்டு கன்னடா நாட்டு பெண்களுடன் இணைந்து போட்டிபோட்டுக்கொண்டு பாரின் லிஸ்டில் இருந்த 21 வகை காக்டெய்ல்களையும் குடிக்க முயற்சித்து, அதிக அளவிலான மது உட்கொண்டதால் அவர் இறந்தது தெரியவந்தது.

இதையும் படியுங்கள் : விராட் கோலிக்காக உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் - ஷேவாக்

click me!