கோடையில் வண்ணமயமாக ஜொலிக்கும் செவ்வாய் கிரகம்! நாசா விண்கலம் எடுத்த கண்கவர் புகைப்படங்கள்!

By SG Balan  |  First Published Jun 27, 2023, 4:57 PM IST

செவ்வாய் கிரகம் பருவகால மாற்றத்திற்கு உள்ளாகும்போது அதன் இயல்பான பண்புகள் மாறும் காணலாம். செவ்வாய் கிரகத்தின் புதிய படங்கள் அதன் தெற்கு அரைக்கோளத்தின் கோடை காலத்தில் எடுக்கப்பட்டது.


நாசாவின் மேவன் (MAVEN) விண்கலம் செவ்வாய் கிரகத்தின் தனித்துவமான அல்ட்ரா வைலட் புகைப்படத்தை கிளிக் செய்து பூமிக்கு அனுப்பியுள்ளது. பொதுவாக சிவப்பு நிறத்தில் இருக்கும் செவ்வாய் கிரகம், இதன் மூலம் முதன்முறையாக வண்ணமயமாகத் தோற்றம் அளிக்கிறது.

நாசா தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள படங்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. செவ்வாய் கிரகம் பருவகால மாற்றத்திற்கு உள்ளாகும்போது அதன் இயல்பான பண்புகள் மாறுவதைக் காணலாம்.

Tap to resize

Latest Videos

செவ்வாய் கிரகத்தின் இந்தப் படங்கள் அதன் தெற்கு அரைக்கோளத்தின் கோடை காலத்தில் எடுக்கப்பட்டது. செவ்வாய் சூரியனுக்கு மிக அருகில் இருந்தபோது அல்ட்ரா வைலட் எனப்படும் புற ஊதா கதிர்கள் வீச்சு அதிகம் உள்ள பகுதி வண்ணமயமான தோற்றத்துடன் மிளிர்கிறது.

” துரோகம்.. ரஷ்யாவை முதுகில் குத்திவிட்டனர்.. கண்டிப்பா இது நடந்தே தீரும் ” கொந்தளித்த புடின்..

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by NASA (@nasa)

இதற்கு முன் ஜனவரி 2023 இல், நாசாவின் மேவன் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது. அந்தப் படம் வடக்கு அரைக்கோளம் சூரியனிலிருந்து அதன் சுற்றுப்பாதையில் தொலைதூரப் புள்ளியை அடைந்தபோது எடுக்கப்பட்டது. அது மேவன் விண்கலம் எடுத்த செவ்வாய் கிரகத்தின் இரண்டாவது புகைப்படம் ஆகும்.

படங்களில் உள்ள ஊதா பகுதிகள் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் ஓசோன் படலத்தின் இருப்பைக் குறிக்கின்றன. வெள்ளை மற்றும் நீல நிறங்கள் செவ்வாய் கிரகத்தின் வானில் மேகங்கள் அல்லது மூடுபனி தோன்றுவதைக் குறிக்கின்றன. இந்த புதிய புகைப்படங்களில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு பச்சை நிறத்தில் தெரிகிறது.

பூமியைப் போலவே, செவ்வாய் கிரகமும் ஒரு சாய்ந்த அச்சில் சுழல்கிறது. இதன் விளைவாக செவ்வாய் கிரகத்திலும் நான்கு வெவ்வேறு பருவங்கள் வருகின்றன. இருப்பினும், நீண்ட செவ்வாய் கிரகத்தின் பருவங்கள் பூமியின் பருவகாலத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு நீண்டவை.

நியூயார்க் நகரில், இனி தீபாவளிக்கு பள்ளி விடுமுறை.. ஆனா இந்த ஆண்டு ஒரு ட்விஸ்ட்..

click me!