டிக்டாக் செயலிக்கு அமெரிக்க கெடு...!! ஒட்டு மொத்த சீனவையும் ஆட்டம் காண வைத்த அதிபர் ட்ரம்ப்..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 7, 2020, 11:24 AM IST
Highlights

டிக் டாக் செயலி மூலம் அமெரிக்காவின் தகவல்களை சீனா திருடுவதாக ட்ரம்ப் குற்றம்சாட்டி வந்த நிலையில் அமெரிக்காவில் டிக் டாக்கை தடை செய்வதற்கான உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

டிக் டாக் செயலி மூலம் அமெரிக்காவின் தகவல்களை சீனா திருடுவதாக ட்ரம்ப் குற்றம்சாட்டி வந்த நிலையில் அமெரிக்காவில் டிக் டாக்கை தடை செய்வதற்கான உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார். செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் டிக்டாக்கை வாங்கவில்லை என்றால் அதற்கு தடை விதிக்கப்படும் என  ட்ரம்ப் எச்சரித்துள்ளார். 

அமெரிக்காவுக்கும்-சீனாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நீடித்து வருகிறது, அதுமட்டுமின்றி தென்சீனக்கடல் விவகாரம், தைவானில் அமெரிக்காவின் தலையீடு, ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டம், உய்குர் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடுமையான கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் விவிகாரம் இரு நாட்டுக்கும் இடையேயான மோதலை பன்மடங்காக உயர்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக சீனா செயலிகளான டிக் டாக், வெட்சாட் போன்ற செயல்களின் மூலம் சீனா அமெரிக்கா தரவுகளை திருடுவதாகவும், அமெரிக்காவை அந்த செயலிகளின் மூலம் கண்காணிப்பு தாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. 

அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் ஹூஸ்டனிலுள்ள சீன தூதரகத்தை அமெரிக்கா மூடியுள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவின் செங்டுவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை சீனா மூடியுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு காரணம் கருதி சீனாவில் டிக் டாக் செயலிகளை தடைசெய்ய போவதாக ஏற்கனவே அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மைக் பாம்பியோ எச்சரித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் சீனாவின் டிக்டாக் செயலியை  அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் வாங்கவில்லை என்றால், டிக் டாக் செயலி தடை விதிக்கப்படும் என  அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே இதற்கான திட்டத்தை அவர் முன்வைத்திருந்த நிலையில், தற்போது இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். அமெரிக்காவின் இந்த முடிவால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில், டிக் டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை மட்டும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய ஏற்கனவே டிக் டாக் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகள் இதற்கான பேச்சுவார்த்தைகள் இரு நிறுவனங்களுக்கும் இடையே நடந்து வரும் சூழலில் செப்டம்பர் 15 க்குள் பேச்சுவார்த்தையை முடிக்க திட்டமிட்டு வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் டிக் டாக் ஐ வாங்கவில்லை என்றால், டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்படும் என டரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் இந்த முடிவு சீனாவை கொந்தளிக்க வைத்துள்ளது. ஏற்கனவே டிக்டாக்கிற்கு இந்தியா தடை விதித்துள்ள நிலையில் அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடதக்கது.  

 

click me!