மீண்டும் இலங்கையின் பிரதமர் ஆகிறார் ராஜபக்சே..! நரேந்திர மோடி வாழ்த்து

By karthikeyan V  |  First Published Aug 6, 2020, 10:48 PM IST

இலங்கை பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகிறார் ராஜபக்சே.
 


இலங்கையின் 8வது பாரளுமன்றத்தை அதிபர் கோத்தபய ராஜபக்‌சே கடந்த மார்ச் மாதம் கலைத்ததையடுத்து, அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட தேர்தல், நேற்று நடைபெற்றது.

இலங்கை பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் 196 உறுப்பினர்களை மக்கள் ஒட்டளிப்பு மூலம் தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுப்பதிவு நேற்று நடைபெற்றது. கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர். இலங்கை முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான ரனில் விக்ரமசிங்கே கொழும்பு நகரில் ஓட்டு போட்டார்.

Tap to resize

Latest Videos

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், மகிந்த ராஜபக்சே தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பிரமுனா இடையே போட்டி நிலவியது.

பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று வெளியாகின. ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பிரமுனா கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போதைய பிரதமர் ராஜபக்சே மீண்டும் பிரதமராக உள்ளார். அவருக்கு இந்திய பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார்.

click me!