Bomb Cyclone 2022 : அமெரிக்காவில் தாண்டவமாடும் ‘பனிப்புயல்’! வீடுகளில் தஞ்சம் அடைந்த மக்கள் - என்ன நடக்கிறது?

By Raghupati RFirst Published Dec 23, 2022, 8:04 PM IST
Highlights

அமெரிக்காவில் குளிர் கால புயல் எப்போதும் இல்லாத அளவுக்கு வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடும் புயல் உருவாகி உள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த தலைமுறையிலேயே யாரும் காணாத குளிர் கால புயலை அமெரிக்காவை தலை கீழாக போட்டுள்ளது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா முழுவதும் நேற்று மட்டும் 2,270 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..லாங் ட்ரைவுக்கு நோ..லோக்கல் ட்ரைவுக்கு எஸ்.. டாடா டியாகோ எலக்ட்ரிக் கார் எப்படி இருக்கு ?

விமான கண்காணிப்பு இணையதளமான Flightaware.com வியாழன் அன்று 22,000க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகிவிட்டதாக காட்டியுள்ளது. சுமார் 5,500 விமானங்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன என்று கூறப்படுகிறது. சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனித்துகள் குவிந்துள்ளதால் மக்கள் கடும் குளிரால் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர்.

பல இடங்களில் சாலைகள் பனியினால் மூடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டுள்ளதால், அதனை சரி செய்ய தொழிலாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். தெற்கு டகோட்டாவில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குளிர் மிக மோசமாக உள்ள நிலையில், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதைத் தவிர்க்குமாறு அங்கு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த புயல் பற்றி செய்தியளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நீங்கள் குழந்தையாக இருந்தபோது பனி பெய்கிறது என்றால்உற்சாகமடைவீர்கள். ஆனால், தற்போது அதுபோல இல்லை’ ஏன்னு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..ஏக்நாத் ஷிண்டே முதல் ரிஷி சுனக் வரை.. 2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட அரசியல்வாதிகள்!

click me!