அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயலும் இந்தியர்களின் எண்ணிக்கை டிரம்ப் அரசின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளால் குறைந்துள்ளது. நாடுகடத்தும் நடவடிக்கைகள் மற்றும் கடத்தல்காரர்களின் பின்வாங்கலால் நிலைமை மோசமாகியுள்ளது.
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சிக்கும் இந்தியர்களின் பயணம் இதுவரை இல்லாத அளவுக்கு ஆபத்தானதாக மாறியுள்ளது. அமெரிக்க அதிபாரக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறை பொறுப்பேற்ற பிறகு சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைத் தொடங்கியுள்ளார். இதனால். அமெரிக்க எல்லைப்புறத்தில் சட்டவிரோதமாக நுழைய முயல்பவர்களைக் கைது செய்வது சென்ற 4 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகவும் குறைந்துள்ளது.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு (USCBP) பிரிவின் அறிக்கைகளின்படி, பிப்ரவரி 2025 இல் 1,628 இந்தியர்கள் மட்டுமே பிடிபட்டுள்ளனர். இதற்கு முன்பு, ஜனவரியில் 3,132 பேர், டிசம்பரில் 5,600 க்கும் மேற்பட்டவர்கள் எல்லைப்புற அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
நாடுகடத்தும் நடவடிக்கை காரணமாக புலம்பெயர்ந்தோருக்கு அடைக்கலம் கொடுத்த கடத்தல்காரர்களும் பின்வாங்கியுள்ளனர். இதற்கிடையில், அமெரிக்காவில் ஏற்கனவே சட்டவிரோதமாக வசிப்பவர்கள் நாடுகடத்தலுக்கு அஞ்சி, வெளியில் நடமாடுவதைக் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதிபர் டிரம்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளும் சட்டவிரோதக் நுழைவுக்கு எதிரான ஒடுக்குமுறையுமே இந்தப் போக்கிற்குக் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்னிக்கை 1600 ஐ கடந்தது! எங்கும் அழுகுரல்! பெரும் சோகம்!
பிப்ரவரி 2025 இல், 74 குஜராத்திகள் உட்பட 344 இந்திய குடியேறிகளை அமெரிக்கா ராணுவ விமானங்களில் இந்தியாவுக்கு அனுப்பியது. முதல் மூன்று விமானங்களில் அனுப்பப்பட்டவர்கள் கைகால்களில் விலங்குகளுடன் வந்தனர்.
பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டவர்களில், 238 பேர் வடக்கு அமெரிக்க எல்லையிலும், 145 பேர் மெக்சிகோவின் தெற்கு எல்லையிலும் பிடிபட்டனர். மீதமுள்ள நபர்கள் நாட்டிற்குள் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் நான்கு பாதுகாவலர் இல்லாத சிறார்கள், மூன்று குழந்தைகள், குடும்பமாகக் கைது செய்யப்பட்ட 52 பேர், மற்றும் 1,572 வயதுவந்த பெரியவர்கள் அடங்குவர்.
சட்டவிரோதக் குடியேற்றத்துக்கு எதிரான டிரம்பின் கடுமையான நிலைப்பாடு குஜராத்திலிருந்து அமெரிக்காவிற்கு நுழைய முயலும் இந்தியர்களின் இயக்கத்தைக் கிட்டத்தட்ட முடக்கியுள்ளது. "டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, கடத்தல்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக உள்ளனர். ராணுவ விமானங்கள் மூலம் சட்டவிரோத குடியேறிகளை இந்தியாவிற்கு நாடு கடத்தத் தொடங்கியபோது நிலைமை மோசமாகிவிட்டது" என்று சம்பந்தப்பட்ட வட்டாரத்திலிருந்து தகவல் கிடைக்கிறது.
இதற்கிடையில், சட்டப்பூர்வ அனுமதி இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் அச்சத்தில் உள்ளனர். பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்துவரும் கலோலைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "குஜராத்தில் இருந்து திரும்பும் மக்களை சட்டவிரோத வழியில் வரவேண்டாம் என நாங்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம். அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்துகிறார்கள், நாங்கள் அடிக்கடி சந்தைகளுக்குச் செல்வதைக்கூடத் தவிர்க்கிறோம். சிலர் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தியுள்ளனர். நாங்கள் அமெரிக்காவில் இருக்கும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறோம்," என்று அவர் கூறினார்.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவின் தரவுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் 90,000 முதல் 1 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவ முயல்கின்றனர். ஆனால், டிரம்ப் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் காரணமாக அந்த எண்ணிக்கை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேசிலுக்குச் செல்லும் SU-57 போர் விமானம்! ரஷ்யாவின் வியூகம் என்ன?