ஆறு மாத குழந்தைக்கும் கொரோனா தடுப்பூசி... அமெரிக்கா அதிரடி...!

By Kevin KaarkiFirst Published Jun 19, 2022, 8:59 AM IST
Highlights

ஆறு மாதம் துவங்கி ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி கிடைக்கும். இவர்களுக்கான டோஸ் 25 மைக்ரோகிராம் என குறைக்கப்பட்டு இருக்கிறது.

அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் ஐந்து மற்றும் அதற்கும் குறைந்த வயதுடையவர்களுக்கு பைசர் மற்றும் மாடர்னா கொரோனா தடுப்பூசியை செலுத்த அனுமதி அளித்து உள்ளனர். அந்த வகையில் ஆறு மாத குழந்தைகளுக்கும் mRNA தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்து இருக்கும் முதல் நாடு என்ற பெருமையை அமெரிக்கா பெற்று இருக்கிறது. 

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பான FDA சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தை அவசர கால பயன்பாட்டுக்கு உபயோகிக் அனுமதி அளித்து உள்ளது. முன்னதாக ஐந்து வயதுக்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. 

“பல லட்சம் பெற்றோர் தங்களின் இளம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என ஆர்வமாக காத்துக் கொண்டு இருப்பர் என எங்களுக்கு நன்றாக தெரியும், அந்த வகையில், இன்றைய முடிவின் மூலம் அது சாத்தியமாகி இருக்கிறது” என நோய் தடுப்பு பிரிவு இயக்குனர் ரோச்சல் வலென்ஸ்கி தெரிவித்து உள்ளார்.

பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவுகளை மேற்கொள்ளலாம். தடுப்பூசிகள் மருத்துவனைகள், கிளினிக்குகள், மருந்தகம் மற்றும் மருத்துவர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் செலுத்திக் கொள்ளலாம். தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் அதிக செயல்திறன் மிக்கவை ஆகும். நாட்டில் உள்ள பெற்றோர் அனைவருக்கும் இன்று நிம்மதி மற்றும் கொண்டாட்டம் செய்வதற்கான நாள் என அவர் மேலும் தெரிவித்தார். 

ஆறு மாத குழந்தைகளுக்கும் அனுமதி:

ஆறு மாதம் துவங்கி ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி கிடைக்கும். இவர்களுக்கான டோஸ் 25 மைக்ரோகிராம் என குறைக்கப்பட்டு இருக்கிறது. இது ஆறு முதல் 12 வயதுடையவர்களுக்கு செலுத்தப்படுவதில் பாதி ஆகும். பைசர் மற்றும் பயோ என் டெக் தடுப்பூசிகள் ஆறு மாதங்கள் முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த ஒப்புதல் பெற்று உள்ளது. 

குழந்தைகளுக்கான தடுப்பூசி மூன்று டோஸ்களாக வழங்அகப்படுகிறது. முதல் இரு டோஸ்கள் மூன்று வாரங்கள் இடைவெளியிலும், மூன்றாவது டோஸ் எட்டு வாரங்கள் கழித்தும் செலுத்தப்படும். இவ்வாறு செலுத்தப்படும் போது முதல் சில மாதங்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்காது. அமெரிக்காவில் வழங்கப்பட்டு இருக்கும் இந்த அனுமதி காரணமாக அந்நாட்டில் வசிக்கும் சுமார் 20 மில்லியன் அமெரிக்க குழந்தைகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். 

click me!