பிரான்சில் UPI பேமெண்ட்! ஈபிள் டவரைப் பார்க்க ரூபாயில் பணம் செலுத்தி டிக்கெட் வாங்கலாம்!

By SG BalanFirst Published Feb 3, 2024, 8:27 AM IST
Highlights

இந்தியர்கள் ஈபிள் டவரைப் பார்க்கச் சென்றால், UPI மூலம் முன்கூட்டியே பணம் செலுத்தி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இந்தியாவின் UPI பரிவர்த்தனை முறையை ஏற்கும் முதல் ஐரோப்பிய நாடு பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து பேமெண்ட் செயலிகளிலும் இந்த UPI முறையில் பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும். இதனால், இந்த முறை இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது இந்த UPI டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை பிரான்ஸ் நாட்டிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்தியா கொண்டுவந்த UPI பணப் பரிவர்த்தனை முறை உலகத்திற்கே முன்மாதிரியாக உள்ளது. இந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையில் இந்தியாவிற்கு அப்பால், வெளியாடுகளிலும் விரிவுபடுத்த மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. பல்வேறு நாடுகளும் யுபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை ஏற்க தொடங்கியுள்ளன.

இந்நிலையில்,UPI பேமெண்ட் வசதியை ஏற்றுக்கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் புதிதாக சேர்ந்துள்ளது. பாரிஸ் நகரில் உள்ள இந்தியத் தூதகரத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் (NPCI), அதன் சர்வதேச அமைப்பான என்.ஐ.பி.எல மற்றும் பிரான்ஸ் நாட்டின் பேமெண்ட் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டன.

அய்யப்ப பக்தருக்கு அடித்த ஜாக்பாட்! சபரிமலை சென்றவருக்கு புத்தாண்டு லாட்டரியில் ரூ.20 கோடி பரிசு!

இதன் மூலம் இனி பிரான்ஸ் நாட்டில் UPI முறையை பயன்படுத்தி பணம் செலுத்த முடியும். பிரான்ஸ் செல்லும் இந்தியர்கள் பேமெண்ட் செயலிகளை பயன்படுத்தி UPI முறையில் பணம் செலுத்தவும் பெறவும் முடியும். இது சுற்றுலா செல்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

இந்தியர்கள் ஈபிள் டவரைப் பார்க்கச் சென்றால், UPI மூலம் முன்கூட்டியே பணம் செலுத்தி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். பிரான்ஸைச் சேர்ந்த லைரா (Lyra) என்ற ஈகாமர்ஸ் மற்றும் பேமெண்ட் நிறுவனம் மூலம் இந்த UPI சேவை செயல்படுதப்படுகிறது.

இந்தியாவின் UPI பரிவர்த்தனை முறையை ஏற்கும் முதல் ஐரோப்பிய நாடு பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தராகண்ட் பொது சிவில் சட்ட வரைவில் புதிய சர்ச்சை! நீதி தேவதையின் சிலையில் மாற்றம் ஏன்?

click me!