தொண்டையில் வலி என்றாலும் மாணவிகளுக்கு இடுப்பு கீழ்தான் ட்ரீட்மெண்ட் .. காமகொடூர டாக்டரால் 3600 கோடி தண்டம்.

By Ezhilarasan BabuFirst Published Jan 21, 2022, 4:36 PM IST
Highlights

மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்துவந்த மருத்துவரால் மிச்சிகன் பல்கலைக்கழகம் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 490 மில்லியன் டாலர் அதாவது 3,600 கோடி இழப்பீடு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது.

மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்துவந்த மருத்துவரால் மிச்சிகன் பல்கலைக்கழகம் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 490 மில்லியன் டாலர் அதாவது 3,600 கோடி இழப்பீடு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது.

அந்தப் பல்கலைக்கழகத்தின் மருத்துவர் ஆண்டர்சன் 1970களில் இருந்து பல்கலைக்கழக வீராங்கனைகளை மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த நிலையில் பல்கலைக்கழகம் இவ்வாறு அறிவித்துள்ளது. மருத்துவத்துறை என்பது முழுக்க முழுக்க ஒரு சேவைத்துறை, உலகில் எத்தனை துறைகள் இருந்தாலும் கடவுளுக்கு நிகராக மதிக்கப்படும் ஒரு துறை உண்டென்றால் அது மருத்துவத் துறையாகத்தான் இருக்கும். போகிற உயிரைக்கூட ஒரு மருத்துவர் நினைத்தால் தடுத்து நிறுத்த முடியும் என்பதுதான் அதற்கு காரணம். அப்படிப்பட்ட மருத்துவத்துறையில் சில நேரங்களில் ஒரு சிலர் செய்யும் தவறுகள் ஒட்டுமொத்த மருத்துவத்துறைக்குமே தலைகுனிவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடுகிறது. அப்படித்தான் அமெரிக்காவில் மிகவும் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய மருத்துவர் பல்கலைக்கழக மாணவிகளை பாலியல் ரீதியாக சித்ரவதை  செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புகழ்மிக்க பல்கலைக்கழகமாக மிச்சிகனில் 1966 முதல் 2003 வரை ஆன் ஆர்பரில் உள்ள  பல்கலைக்கழகத்தில் மருத்துவராக பணியாற்றியவர் ரிச்சர்ட் ஆண்டர்சன், இவர் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் பிப்ரவரி 2020 இல் இதுதொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டது. டாக்டர் ஆண்டர்சனின் பாலியல் வன் கொடுமைக்கு ஆளானவர்கள் முன் வந்து புகார் கொடுக்கலாம் என மிச்சிகன் பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டது. இது தொடர்பாக அதிகாரிகள் ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தனர். துரதிஷ்டவசமாக 2008ஆம் ஆண்டு குற்றச்சாட்டுக்கு ஆளான ஆண்டர்சன் இறந்துவிட்டார்.  1966 முதல் 2003  வரை அவர் மிச்சிகனில் பணியாற்றியவர் 2003ல் ஓய்வு பெற்றார் அவர்.

ஆண்டர்சன் பல்கலைக்கழகத்தின் சுகாதார வசதியின் இயக்குனராகவும், கால்பந்து உட்பட பல தடகள அணிகளுக்கு மருத்துவராகவும் இருந்தார். அதாவது டாக்டர் ஆண்டர்சன் தன்னிடம் வரும் நோயாளிகள் ஒவ்ஒருவரிடமும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்து வந்தார் என்றும், தன்னிடம் வரும் நோயாளிகளின் அந்தரங்க உறுப்புகளை அதாவது இனப்பெருக்க உறுப்புகளை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தார் என்றும் அவர் மீது குற்றஞ் சாட்டப்பட்டது. குறிப்பாக மாணவிகளுக்கு தேவையில்லாத பரிசோதனைகளை ஆண்டர்சன் செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. உதாரணமாக தொண்டை வலி இருப்பதாக மாணவிகள் கூறினாலும் அவர் இடுப்புக்கு கீழ் பரிசோதனை செய்வதையே வாடிக்கையாக வைத்திருந்தார். அதாவது பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளில் தொட்டு ஆராய்ந்து பின்னர் சிகிச்சை வழங்குவதை அவர் தொடர்ந்து செய்து வந்தாக தெரியவந்தது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் ஜெமி வைட் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வாதாடி வந்தார். கிட்டத்தட்ட ஆண்டர்சனால் சுமார் 1050 பேர்  பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. கடந்த ஆண்டு வில்மர் ஹேல்  சட்ட நிறுவனம் 240  பக்க அறிக்கையை வெளியிட்டது. ஆண்டர்சன் எண்ணற்ற சந்தர்ப்பங்களில் நோயாளிகளுடன் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்றும் அது கூறியது. அவரின் இந்தச் செயல் மிச்சிகனில் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் போ ஸ்கெம்பெக்லரின்  நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்றும் வேதனை தெரிவித்தது. ஸ்கெம் பெக்லரின் மகான்களில் ஒருவர்தான் matt schembechler  ஆண்டர்சன் தனக்கு 10 வயதாக இருந்தபோதே பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறினார். இதுகுறித்து தனது தந்தையிடம் கூறியதாகவும் ஆனால் அவர் எதுவும் செய்யவில்லை என்றும் விசாரணையில் தெரிவித்தார்.

இந்நிலையில் ஆண்டர்சன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் ஆண்டர்சனால் பாதிக்கப்பட்ட சுமார் 1050  பெருக்கு 460 மில்லியன் டாலர் அதாவது 3,600 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க மிச்சிகன் பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டது. எதிர்காலத்தில் பாதிக்கப்பட்டதாக கூறி எவராவது வரும்பட்சத்தில் அவர்களுக்கும் வழங்கப்பட முன்வைப்பு தொகை 30  மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

click me!