எலிகளை தேடிக்கொல்லுங்கள்... கொரோனா பாதிக்கப்பட்டதால் அரசு அதிரடி!!

By Narendran SFirst Published Jan 19, 2022, 3:54 PM IST
Highlights

ஹாங்காங்கில் எலிகளுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து எலிகளை கொல்ல அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஹாங்காங்கில் எலிகளுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து எலிகளை கொல்ல அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா எனும் கொடிய பெருந்தொற்று கடந்த இரண்டு வருடங்களாக உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொரோனா மனித குலத்திற்கும் மட்டுமில்லாமல் நாய், பூனை, சிங்கம் என விலங்களுக்கும் அச்சுற்றுத்தலாக மாறியுள்ளது. குறிப்பாக வன உயிரியல் பூங்காவில் இருக்கும் சிங்கம், புலி, குரங்கு போன்ற விலங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஊழியர்கள் மூலம் விலங்குகளுக்கு பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனிடையே அண்மையில் பெல்ஜியம் நாட்டிலுள்ள ஆண்ட்வெர்ப் உயிரியல் பூங்காவில் இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் ஹாங்காங்கில் ஹாம்ஸ்டர் எனப்படும் எலிகள் மத்தியில் கொரோனா பரவி வருவது அனைவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்கு இருக்கும் ஹாம்ஸ்டர் எலி வளர்ப்பு மையத்தில் தான் முதலில் ஒரு எலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு உள்ள வெள்ளை எலிகளை சோதனை செய்ததில் 11 வெள்ளை எலிகளுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்து எலிகளுக்கும் உருமாறிய டெல்டா கொரோனா தொற்று இருந்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டது. அந்தக் கூடத்தில் 2,000 வெள்ளை எலிகள் இருந்துள்ளன. இந்த மையத்தின் உரிமையாளருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இம்மையத்தில் எலிகளை மக்களும் விலைக்கு வாங்கிச் செல்வார்கள். இதனால் வாங்கிச் சென்ற மக்களுக்கும் கொரோனா பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஆகவே எலிகளிடம் இருந்து மீண்டும் புதிய கொரோனா அலை தோன்ற வாய்ப்புள்ளதால் ஹாம்ஸ்டர் எலிகளை கொலை செய்ய ஹாங்காங் அரசு உத்தவிட்டுள்ளது. மேலும் அந்த மையத்திலிருந்து எலிகளை வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்களை கண்டறியும் பணியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுக்குறித்து ஹாங்காங் சுகாதார அமைச்சர் சோபிடா சான் கூறும்போது, இந்த எலிகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா பரவுகிறதா என்று இதுவரை அறிவியல் பூர்வமாக உறுதி செய்யவில்லை. இருப்பினும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்காகவே எலிகளைக் கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் ஹாங்காங் மக்களையும் அண்டையில் இருக்கும் சீன மக்களையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. 

click me!