AbuDhabi explosion: அதிர்ச்சி தகவல்..அபுதாபி ட்ரோன் தாக்குதலில் மூவர் பலி.. 2 பேர் இந்த நாட்டை சேர்ந்தவர்கள்!!

By Narendran SFirst Published Jan 17, 2022, 5:24 PM IST
Highlights

அபுதாபி ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

அபுதாபி ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபியில் உள்ள விமான நிலையம் அருகே புதிய விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று இந்த கட்டுமான தளத்தில் ட்ரோன் மூலம், தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அபுதாபியில் ADNOC எண்ணெய் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்குக்கு அருகிலுள்ள முசாஃபா பகுதியில் மூன்று எரிபொருள் டேங்கர் லாரிகள் வெடித்துச் சிதறியது.

அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் கட்டுமான தளத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அபுதாபி போலீசார் தெரிவித்தனர். இது ட்ரோன் மூலம், தங்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்று, ஏமனின் ஹவுதி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது தாக்குதல் நடத்தியதாக வளைகுடா நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகர் அபுதாபியில் நடைபெற்ற இந்த தீவிபத்து ஆளில்லா விமானங்களால் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்திருந்தனர். 

அபுதாபியில் ADNOC எண்ணெய் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்குக்கு அருகிலுள்ள முசாஃபா பகுதியில் மூன்று எரிபொருள் டேங்கர் லாரிகள் வெடித்துச் சிதறியதில், அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் கட்டுமான தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அபுதாபி போலீசார் தெரிவித்தனர். ஆரம்ப கட்ட விசாரணையில் ஒரு சிறிய விமானத்தின் பாகங்கள் வெடிப்பு மற்றும் தீ விபத்தை ஏற்படுத்திய இரண்டு தளங்களிலும் இருந்ததால், இந்தத் தாக்குதல்கள் ட்ரோன் மூலம் நடைபெற்று இருக்கலாம் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானை சேர்ந்த நபர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 6 பேர் படுகாயமைடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

click me!